Monday, December 22, 2008

நீயா நானா ஆசிரியரும் மாணவரும்

இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாணவர்களில் பலர் ஆசிரியர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் என்று விவாதம் தொடக்கி வைத்தனர்!

பதில் சொன்ன பெரும்பாலான ஆசிரியர் தாங்கள் தங்கள் அறிவினை கூர் தீட்டி தான் வைத்து இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

ஆனால் விஜய் டிவி தொகுப்பாளர் ஆசிரியர்களுக்கு இரு சிறப்பு விருந்தினர்களையும் தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு மௌனம் சாதித்த ஆசிரியர்களை குற்றம் சாடுவது எந்த வகையில் சரி?

அங்கு வந்து இருந்த பெரும்பாலான ஆசிரியர்கள் தனியார் கல்வி நிலையங்களில் பணி செய்பவர்கள். மேலும் அவர்கள் தங்கள் துறை பற்றிய அறிவினை மட்டுமே மேம்படுத்திக்கொள்ள கடமைப் பட்டவர்கள். ஒரு கணித ஆசிரியர் தன் பாடங்களில் மிகவும் தேர்ச்சி பெற்று தன் துறை சம்பந்தமான கட்டுரைகளைப் பெற்று மேலும் படித்தல் மட்டுமே அவரை மேம்படுத்தும்.

இந்தியாவில் தற்போதுள்ள அனைத்து அறிவு சார் ஆராய்ச்சி நிலையங்களில் பணி செய்யும் மக்களும் தங்கள் துறை தவிர வேறு விஷயங்கள் அறியார். இது உலகுக்கும் பொருந்தும்.

எனவே ஆசிரியர்கள் தாங்கள் கற்றுத் தருவதில் மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்றாலே போதுமானது. ஊரில் நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் பார்க்க வேண்டிய தேவை இல்லை.

வந்த சிறப்பு விருந்தினர்க்கு அண்ணா பல்கலையில் பணி செய்யும் மிகப் பெரிய ஒரு அறிஞரின் அறிமுகம் உண்டா என்றால் என்ன சொல்ல முடியும்?

ஆனால் அவர்களின் கருத்துக்கள் ஆழமானவை.
ஆசிரியர்கள் மாணவர்களை குற்றவாளிகளைப் போல் கருதக் கூடாது.
தங்கள் துறை புதிய செய்திகளை அறிய வேண்டும்.
இவையே அவர்களை வழிநடத்தும்.

எனக்கு " வெள்ளை புலி " பற்றி அறிய வேண்டிய தேவை இல்லை. இதிலும் அவர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

Monday, December 8, 2008

சாதிகள் வாழ்க!

நம் மக்கள் எப்போதும் தங்கள் குறைகளை மறைத்து மாற்றார் குறைகளை பெரிதாக எண்ணி குமைவதில் வல்லோர்!

பெரியார் தொடங்கிய சுய மரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்று சொன்னதன் முக்கிய காரணம்!

மக்கள் ஒருவரை ஒருவர் இழிவு செய்து தாழ்த்தி வாழ்தலுக்கு முக்கிய காரணமாக கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வதே!

பெரியாரின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்பதாக கூறிகொண்டாலும் நம்முள் இன்னும் சாதிப் பித்து நீங்க வில்லை.

தன்னை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் தன்னை மேலானவன் என்று சொல்லிக் கொள்ளவும் சாதி என்ற சங்கிலியில் தன்னை பூட்டிக் கொள்கின்றான்!

சமூகத்தில் தீண்டாமை என்னும் தீ தன்னை சுடும்போது எதிர்த்து குரல் கொடுக்கும் அதே வேளையில் தன்னால் மற்றவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
எந்த மாற்றமும் கொள்வதில்லை!

கடவுளை ஏற்றுக் கொண்டு உலக நாடுகளில் மக்கள் ஒருமையோடு வாழும் வேளையில் இங்கு சாதி, சடங்கு, சாதகம், கர்மம் என்று பல்வேறு பட்ட குழப்பங்களில் சீரழிந்து வருகிறோம்!

யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்று வாழ்ந்த மக்கள் இன்று தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளில் சிக்கி தவிக்கிறோம்!

கடவுளை ஏற்றுக் கொள்வது கொள்ளாதது அவரவர் விருப்பம்!
ஆனால் கடவுள் பெயரை சொல்லி நம்மில் பிரிவுகளை ஏற்படுத்தி வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிறந்த நேரம் மட்டுமே ஒருவன் வாழ்வை நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கையில் நாம் செய்யும் தவறுகளை எப்படிக் களைவது?

நம் சமய முன்னோர்கள் இந்த கோள்களை விட கடவுளை நம்பியவர்கள்!
ஆனால் நாம் கடவுளை விட்டுவிட்டு ஆசாமி சொல்லும் சோதிடத்தில் நம்மை
மூழ்கடித்து உள்ளோம்!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் வார்த்தைக்கிணங்க
நம்மில் நம்மை நேசிக்கும் மனதை பெறுவோம்!

Sunday, November 16, 2008

இட ஒதுக்கீடு வேண்டாம்!

இட ஒதுக்கீடு காரணமாகவே முன்னேறிய சமூகத்தினர் தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கவிதையை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு சாதியை இட ஒதுக்கீடு என்ற பெயரில் வளர்ப்பதாக எல்லா மேந்தட்டு மக்களும் கூப்பாடு போடுகின்றனர்.


சமீப காலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரி, பணியிடங்களில் பொது இடங்களான முப்பது சதவீத இடங்களில் எல்லா சமூகத்தினரும் இடம் பெற்ற காரணம் என்ன?

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்!
நீங்களும் நாங்களும் வாழும் இந்த சமூகத்தில்

ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒதுக்கி வையுங்கள்!
பிறப்பு முதல் இறப்பு வரை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் சாதி மட்டுமே முக்கிய பிரிவாக இருக்கின்றது!

இங்கு உள்ள எல்லா மக்களும் நாங்கள் சாதி பார்க்காமல் சாதகம் பார்க்காமல்
சடங்குகளுக்கு உட்படாமல் திருமணம் செய்து கொள்ளுவோம்.
எங்கள் பிள்ளைக்கு எந்த சாதியின் அடையாளத்தையும் புகுத்த மாடோம் என்று உங்களால் உறுதி கொடுக்க முடிந்தால் எண்ணி பத்தே ஆண்டுகளில்

இட ஒதுக்கீடு என்பது இல்லாததாகி விடும்.


பேருந்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
பணியிலும், பர்லிமேன்டிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
ஏனென்றால் எங்கள் வீட்டு பெண்களும் வாய்ப்பு பெறுகின்றனர்!

ஆனால் தலித்துக்கு இட ஒதுக்கீடு என்றால் தரம் தாழ்ந்து விடும்?
என்ன ஒரு சுயநலம் எங்களுக்கு?

Saturday, November 15, 2008

oadam

மனம் என்னும் தோட்டம்

மனம் எப்போதும் தூய்மையே செய்ய என்ன வேண்டும்!
யாரோ ஒருவன் எப்படியோ போனால் என்ன என்று
விரக்தி நிலை அடைந்தால் அது நம் எண்ணம்
பிறக்கும் மனதை நிச்சயம் பாதிக்கும்.

வழியில் யாரோ வலியால் துடிக்க நமக்கு என்ன என்று போவதில்
நம் கையால் ஆகாத்தனம் மட்டுமே வெளிப்படும்!
ஆனால் அவன் துன்பம் அவனுக்கு தேவையானதே என்று நினைத்தால்?
நம் மனத்தில் எதோ விலங்கு எண்ணம் வந்து விட்டதன் அடையாளமே இது!

பாரதியும் மற்றும் சமூக சிந்தனையாளரும் நமக்கென்ன என்று விட்டு
சென்றிருந்தால் நாம் சமூகம் இன்னும் கீழேயே இருந்திருக்கும்.

வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் மனம் இல்லாவிடினும் தன்
முன்னால் துன்பப் படும் மனிதனைக் கண்டு மனத்தில் ஒரு சிறு சலனமும்
இல்லையானால்?

நம் மனம் என்னும் தோட்டத்தில் ரோஜாக்கள் பூக்காவிட்டால் பரவாயில்லை!
கற்றாளை பயிர் செய்யாமல் இருப்போம்!


இன்று அயலான் வீடு பற்றி எரிகிறது என்று வாளாயிந்தால் நிச்சயம்
நாளை நம் வீடு பற்றி எரியும்போது பார்க்க நாம் இருக்க மாட்டோம்!

நம் மனதை எப்போதும் மனித நலனில் அக்கறை கொண்டதாக வைப்போம்!
இல்லையெனில் நாம் மனிதனா என்று நம் வருங்காலம் நம்மை எள்ளி நகை செய்யும்!

மனதில் வளர்ந்து விட்ட களைகளை இனியாவாது பிடுங்கி எறிவோம்!
மனிதனாக வாழ முயல்வோம்!

Thursday, November 13, 2008

கற்பனை

கற்பனை வாழ்க்கை

பள்ளிக்கு சென்றேன்
கல்லூரிக்கு சென்றேன்
வேலைக்கு சென்றேன்
கல்யாணம் செய்தேன்
குழந்தை பெற்றேன்
வளர்த்தேன்
வாழ மட்டும் மறந்தேன்!


தற்கொலை!

தன்னை அழித்து
தன் சொந்தங்களை
துடிக்க செய்து
இறப்பது எந்த வகையில்
மானுடம்!

மானம்
மானம் அழிந்தபின் வாழாதே!
அது சரி மானம் என்பது என்ன?


காதல் தோல்வி!

ஒருவரை ஒருவர் வெறுத்து வாழும்
வாழ்வில் பயன் என்ன?
என்னை நோக்கி நீ புன்னகை
நான் என்ன செய்ய வேண்டும்?


நிலவின் மிச்சம்!

உன் முகம்?நாட்கள்!

ஓடும் கடிகார முள்ளுடன்
போட்டி போட முடியாமல்
கடத்துகிறேன் நாட்களை!


மழை!

பெய்யும் போது சுகம்!
வீடில்லாத தெரு வாசிக்கு?


நட்பு!

என்ன கொடுத்தால் பெறலாம்?
மாறாத கட்டுப்பாடில்லா அன்பு கொடுத்தால்!

தாய்!

எப்போதும் அன்பினைக் கொடுத்து
அன்பினை மட்டுமே ஏற்கும் ஆலயம்!

உலகம் அன்பு மயமாகும்!
எல்லோரும் தாய்மை அடைந்தால்!

Wednesday, November 5, 2008

சிந்தை

மாந்தர் அன்பு

மண்ணில் வாழும் எல்லா மக்களும் நட்போடு வாழ வழி செய்ய வேண்டும்!
விண்ணில் நாம் செலுத்தும் கோள்கள் நம்மை ஒருவரோடு ஒருவர்
கலந்த பேச வழி செய்கிறது!

நாம் ஏன் மனத்தளவில் பிரிந்து வாழ வேண்டும்?
எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழ்தல் நமக்கு நன்மையன்றோ!

உன்னைப் பெற்றவளும் என்னைப் பெற்றவளும் நம் நலன் நாடி வாழ்ந்தார்!
நம்மில் ஒருவரை ஒருவர் பகைத்தால் அவர் தம் உள்ளத் தவிப்பு என்ன செய்யும்?

கண்ணில் ஒன்றை ஒன்று பகைத்து வேறு காட்சி கண்டால் வருவது தலைவலி!
நம் எண்ணக் குளறுபடி நமக்குத் தரும் மனத்தில் வலி!

நாம் வாழ்வது நம் சந்ததிக்காக!
நம்மை நாம் வெறுத்தால் நம் சந்ததி எப்படி வாழும்?

திறக்கட்டும் நம் உள்ளக்கதவு !
குடியேரட்டும் அதில் மாந்தர் எல்லாம்!

கைகள் விரிந்து அணைக்கட்டும் ஆருயிரை எல்லாம்!
பார்வை விரியட்டும் மண்ணில் உள்ள மக்கள்
எல்லோரையும் தாய்மையோடு நோக்க!

என் பாதை எப்போதும் வழி தரட்டும் எல்லோருக்கும்!

உன் பேச்சு

நீ பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை!
என்னை அலட்சியம் செய்வதாய் இருப்பினும்!

உன்னிடம் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் ஒன்றே!
உன் தற்பெருமை!

உன் மொழி ஆற்றல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!
இத்துனை கோபத்தில் சொற்களை கோர்க்கலாமா!

உனக்கு பிடித்த கவிதை வரிகளும் என்னைக் கள்
குடித்த போதை கொள்ளச் செய்கின்றன!

உன் அழகிய இதழ்ப் பூ உதிர்க்கும் சொற்கள் அத்தனையும்
சேகரிக்க என்னிடம் இல்லை பை!

மலர்கள் எப்போதும் அழகாய் இருந்தாலும் நீ மட்டும் ஏன்
சில நேரங்கள் கோபம் கொள்கிறாய்!

உன் மனதுள் இருக்கும் என்னை உன்னால் எதிர்த்துப்
பேச முடியுமா?

Sunday, October 26, 2008

சந்திரயான்

காலைக் கதிரவன் எழுப்பிய வேளையில்
புலப் பட்டது நான் இருப்பது நடைபாதையில்!

பன்றிகளின் உறுமல் உணர்த்தியது
திறந்தவெளிக் கழிப்பறையை!

பையில் இல்லாத சில்லறை அறிவித்தது
எனக்கு வேலை இல்லை என்று!

கையில் கொண்ட சான்றிதழ் சொன்னது
நான் பட்டதாரி என்று!

வயிற்றின் குமுறலில் என்னை உணர்ந்தேன்!
சென்றேன் பொதி சுமக்க!

இந்தியா விண்ணுக்கு அனுப்பியது ஆளில்லா கலத்தை!
மார் தட்டிக் கொள்ள நாங்கள் வல்லரசு என்று!

என் அவள்

கண்கள் இரண்டின் வீச்சில் காயம் அடைந்தது மனம்!
கொவ்வைச் செவ்விதழ்கள் சிந்திய முத்தம் உயிர்த்தது உயிர்!
கொஞ்சு தமிழ் பேச்சில் புது இலக்கியம் பிறந்தது!
உன்னை எண்ணி இருந்ததால் எமனும் என்னை நெருங்க வில்லை!


உன் ரோஜா மலர்க் கைகளை வண்டுகள் நாடுகின்றன!
என் விரல் நகம் தீண்டவும் விடாமல் மூடிக் கொள்கிறாயே?

பூவின் குணம் மனம் பரப்புவது!
தாயின் குணம் அன்பு செய்வது!
நீ தாயாகப் போகும் பூ அல்லவோ!
கண்ணே என் இந்தப் பாராமுகம்?

வடக்கு நோக்கிய காந்த ஊசி போல்!
என் மனம் எப்போதும் உன்னை நோக்கியே!

தெய்வம் தேடும் மானிடரே!

பிஞ்சு குழந்தையின் நெஞ்சத் தாமரை மலர் பரப்பிய
மணம் வீசும் முகமலரின் சிறு கண் மலர்கள்
வீசும் ஒளியின் பேர் சொல்வீரோ!
உங்கள் உள்ளம் தொட்ட அவ்வீச்சை என்ன சொல்லி அழைப்பீர்?


அன்பு கொண்ட நெஞ்சிலே கருணை பிறக்கிறது!
கருணை கொண்ட நெஞ்சிலே தெய்வம் வாழ்கிறது!

!
!

ஈழத் தமிழர் கண்ணீர்

மனித உணர்வுகள் எல்லோர்க்கும் ஒன்றென்றால் ஏன் ஈழத் தமிழர் கண்ணீர் என்னைச் சுடுகிறது? மாற்றானைக் குளிர்விக்கிறது?

சிந்தனை ஒன்றுடையாள் என்றானே பாரதி ! இங்கு என் ஒரு கை பற்றி எரியும்போது மற்றொரு கை புதுப் பட்டாசு வெடிக்கிறதே?

அன்று தமிழனை துரத்தினான்! இன்று வட இந்தியனை!
நாளை? தன் உடன் பிறந்தோனையா?

அடிமை இந்தியா ஒன்றாய் எதிர்த்தது வெள்ளையனை அன்று!
விடுதலை இந்தியாவில் எம்மை யாமே எதிர்க்கிறோம்!

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்று அறிவியல் சொல்கிறது!
நம்மை நாம் அழித்து யாரோடு வாழ்வோம்?

Saturday, October 18, 2008

வந்தாய் வென்றாய் சென்றாய் ----வீழ்ந்து விட்டேன்.

நாளைக்கு அவளை என் வீட்டுக்கு அழைக்கலாம் என்று ஆவலோடு என் மனதை சாந்தபடுத்தி இன்றைய வகுப்புக்கு சென்றேன். எங்கள் முந்தைய உரையாடல் மூலம் அவளை பற்றி நல்ல ஒரு எண்ணம் ஏற்பட்டதன் விளைவாக மனம் அவளையே சுற்றி சுற்றி வருகிறது. அவள் என்னுடன் எந்த விதமான நட்பினை பாராட்டுகிறாள் ? வெறும் தமிழ் நண்பர் என்பது மட்டுமா? நான் எப்படி அவளுடன் பழகுவது ? வகுப்பு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் அவளுடன் பேச என்ன செய்வது? அவளோடு பேசும் போது என் மனம் என்னை விட்டு நீங்கி விடுகிறது. என்னால் என் மன ஓட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கடனே வந்து விழுகின்றது.


அவளை பற்றி மேலும் நான் அறிய விழைகிறேன். ஞாயிறு அன்று அவளை என் வீட்டுக்கு அழைக்கலாம் என்று எண்ணி என் அன்றைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். ஆனால் அதைப் பற்றி சிறிதேனும் சிந்தை செய்யாமல் அவள் அகன்றாள்.

அவளின் இயல்பான மொழிப் பயன்பாட்டில் எனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. நற்குணப் பெண் அவளின் மனதுள் எப்படி என்னை சிறை செய்வேன்?

மேகத்தின் உள் மறைந்த நிலவைப் போல அவள் மனம் உள்ளது. எப்போதோ தெரியும் சிறு ஒளிக் கீற்றில் அவள் உள்ளக் கருத்தை எப்படி அறிவது?
காற்றில் களைந்து ஓடும் மேகத்திரள் போல் அவள் மனத்திரை என்னைக் கண்டதும் எனக்காக ஓடி ஒதுங்காதா? நான் அவள் மனதோடு இனிய பொழுது கழிக்க இடம் அளிக்காதா?

அவள் முகமலர் என் மனத்தின் உள் பதிந்தது போல் என் மனம் அவள் உள் கலந்து உறையாதா? அழகு மிக்க மலர் மலர் முகச் சிரிப்பை எனக்காக சிந்த மாட்டாளா?

தமிழ்த் தேனே நாங்கள் இருவரும் மனம் உவந்து பருகுவது உனையே. என் மனத்து என்ன அலைகளை அவளிடம் சென்று சேர்ப்பாயா? உன் இனிய சுவை சேர்த்து என் மனக்காதலை அவளிடம் தெரிவிப்பாயா?

மலைப் பாதையில் இன்று நான் நடந்து சென்றபோது கண்ட காட்சிகளை நான் எப்படி உரைப்பேன்? மழலை பேசும் குழந்தைகள், ஓடி ஆடும் சிறார்கள், அழகு பெண்கள் எல்லோரும் எத்துனை சிறப்பாக தங்கள் பொழுதினை கழித்து மகிழ்ந்தனர்?

விரிகடலின் கரையில் அமைந்த இம்மலையின் மேல் செப்பனிடப் பட்ட இந்த சாலையின் இரு மருங்கிலும் மலை முழுதும் பரவிக் கிடந்த மரங்களும், செடிகளும், கொடிகளும், புல்வெளிகளும் இயற்கை அன்னையின் கைவண்ணத்தை எவ்வளவு அழகாக வெளிபடுத்தின?

இந்த அழகிய உலப்பாதையில் மங்கையர் அனைவரும் தங்கள் காதலருடன் சேர்ந்து நடந்த காட்சியும் மக்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்திய பாங்கும் பேரழகோடு இருந்த நிலையை நான் உரைக்க வல்லேன்?

என் மனத்தேரில் அமர்துள்ள கண்மணி நீ மட்டும் இருந்திருந்தால் ஆஹா! எத்தனை சிறப்பு பெற்று இருக்கும் இந்த மலைப்பாதை உன் பாதம் பட.

மலர் போன்ற அவள் இணைக்கைகளை அல்லை எடுத்தபடி சேர்ந்து நான் நடந்திந்தேனானால் அதற்கு ஈடு உண்டோ? என் மனகிடக்கையை ஒன்றும் அறியாமல் நான் அழைத்தும் ஏதும் சொல்லாமல் சென்றாயே?

உன்னை நான் என்று அடைவேன்?

நீலக்கடல் எங்கும் நாவாய்கள் அழகாக அணி வகுத்து பவனி வரும் அழகினையும் காற்றின் அணைப்பில் அவை முன்னேறும் வேகத்தையும் கண்ணே நீ அருகிருந்திதால் அழகுடன் இனித்திருக்கும் ஆனால் நீ இல்லாமல் உன்னை நினைத்து துயருறும் நிலை வெளிப்படுத்துவதாக அல்லவா இந்தப்படகுகள் அங்கும் இங்கும் அலைந்து என் மனத்தை பிரதி பலிக்கின்றன.

கண்ணே உனக்கு மின்மடல் அனுப்பிவிட்டு உனது பதிலுக்காக நிமிடம் ஒருமுறை மின்னஞ்சல் பெட்டியை பார்த்திருந்தேன். ஏனோ ஒரு பதிலும் இல்லை,. நான் என்ன என் காதலிய அதில் எழுதி இருந்தேன்?

நான் உன்னை எந்த நிலையில் வைத்து அறிவது? நீ அன்பு செய்வாயா மாட்டாயா என்று தெரியாமல் என் மனது அலையுனுள் பட்ட சிறு துரும்பு போல முன்னும் பின்னும் மேலும் கீழும் அலைகிறதே?

ஒளி முகம் படைத்த நீ உன் சிறுவாயால் அழகாக என்னை பார்த்து ஒரு குறு நகை புரியாயோ? அந்த குறிப்பில் என் மீதுள்ள காதலை உணர்த்தாயோ? நான் உன்னை நினைந்து நினைந்து உனுக்குலைந்த நிலையை எப்படி உரைப்பேன்?

கண்களின் சிருஅசைவால் நீ உன்னை எனக்கு தர மாட்டாயா? நாளும் நீ எத்தனையோ என்னிடம் பேசுவாய் என்று மயங்கி அவளிவுற்றேனே?
என் மனக் காதலை நான் காட்டும் அன்பின் மூலம் அறிந்து உன் மனத்துள் என்னை சேர்க்க மாட்டாயா?

மலர்கள் எல்லாம் வண்டுகளை நோக்கி தங்கள் புன்னகை வீசுகின்றன. மெல்லிதழ் படைத்த நீ என்னிடம் ஒரு சிறு அசைவையும் காட்ட மறுப்பதேன். உன் மனத்தில் எனக்கொரு இடம் அமைப்பாய் என்று காத்திருக்கின்றேனே?


ஞாயிற்றின் பொன்னொளியில் பூத்த ஒரு செந்தாமரை மலரைப்போல் உன் இரு கண்ணோளியில் என் மனத்தாமரை மலர்ந்து உன் மனதை நோக்கி ஒளியோடு மணம் வீசுவதை நீ அறியாயோ?

அருள் பெற்ற மனம் போல் உன் உள் அன்பினைப்ப் பெற்று நான் உய்யலாம் என்று எண்ணி தவம் கிடக்கும் கோலத்தைகண்டு நீ உன் முழுமனதோடு என்னை ஆரத்தழுவிக்கொள்வாயோ?

தேன் நிறைந்த பலச் சுளைபோல் அமைந்த உன் இதழ்களால் என்னை நோக்கி உள்ளப்பூ விரிய ஒரு மென்னகை புரிந்தால் என் மனம் அடையும் ஆனந்தம் எப்படி விவரிப்பேன்?

காற்றில் அலையும் பட்டற்ற கொடி போலே என் கட்டற்று உன்ன்னையே எண்ணி எண்ணி அலையும் என் மனதை அறியாயோ?

மனம் எல்லாம் நீயே முளுதமர்ந்து என்னை வேறு சிந்தனை இல்லாமல் கட்டியமைத்திட்டாய். எப்படி நான் உன் அருகாமை இல்லாமல் இனி வாழ்ந்திட முடியும்?

இத்தனை துயருடன் அலைகடலின் சிறு தெப்பமென இலக்கின்றி பயணம் செய்யும் என்னை உன் மனம் எனும் விளக்கைக் காட்டி உன்னுள் என்னை சேர்ப்பாயா?

என் இந்த துன்பம் எதுவும் அறியாமல் உன் பணியிலேயே உன் உள்ளம் திருப்பி உள்ளாய். ஒன்றை அறிந்துகொள்! என் மனக்காதளினால் என் உயிர் கரைந்தளிவது உன்னால் தான். ஆனால் இதையும் நீ எப்படி அறிவாய்?பார்ட் ௨:ஆற்றை கடக்க படகில் ஏறி துடுப்பு பிடித்து நகரும்போதே கையிலிருந்து விடுபட்ட துடிப்பினைப் போல கண்ணே நீ என்னை "விட்டு விட்டாயே" . ஆவலுடன் என் மனக் காதலை உன்னிடம் சொல்லி என் மனத்திருக்கும் தேவி நீதான் என்று வெளிப் படுத்த எண்ணிய வேளையில் என் நெஞ்சில் கூரிய வேலைப் பாய்ச்சி விட்டாயே!.

நாம் ஒருவரை ஒருவர் அறிந்து "இயல்பிலேயே காதல் மலர் பூக்கும்" , அம்மலரை உன் அழகு கைகளில் காணிக்கை ஆக்கலாம் என்று நினைத்திருந்தேனே! நீயோ முன்பே வேறொருவன் உள்ளத்தை களவாடி விட்டாய் என்று இயல்பாக சொல்லிச் சென்றாயே!

மண்ணில் ஊன்றி வைத்த காதல் விதை மெதுவாக தக்க நேரத்தில் மண்ணைப் பிளந்து வந்து உன் அன்பு நீரில் வளர்ந்து கனி கொடுக்கும் அன்று நான் காத்திருந்த வேளையில் உன் அழகிய பிஞ்சு கால்களால் அதனை மிதித்து நசுக்கி விட்டாயே!


இந்த சில நாட்களில் உன்னிடம் நான் பேசிய ஒரு சில வார்த்தைகளைக் கொண்டே உன் மனதில் என்னை நிறைத்து விடலாம் என்று முழு மனதோடு
இருந்த வேளையில் உன் உள்ளத் தாமரையை வேறொரு வண்டு கவர்ந்து விட்டதாக சொல்லிச் சென்றாயே!


நீ என்னிடம் சொன்ன இந்த செய்தியையும் எந்த இயல்பும் மாறாமல் என் மனதில் வாங்கி மனம் கலங்கி தவித்து நின்றதை நிச்சயம் நீ அறிய மாட்டாய்!

சீ! சீ! இந்த பழம் புளிக்கும் என்று என்னால் சொல்ல இயலவில்லையே!

உன் மேல் இந்த சில காலத்துள் எத்துணை அன்பை வைத்து விட்டேன்!. உன்னை விட்டு என்னால் எப்படி எளிதில் விட்டு நீங்க முடியும்?

காற்றின் வேகத்தை தாளாமல் ஆடிடும் கலம் போல என் மனம் இந்த துன்பக் கடலில் அலைகிறதே!

ஒன்று நிச்சயம். என் மனதில் ஒரு ஆறாத வடுவை நீ உன்னை அறியாமலேயே மிக ஆழமாக ஏற்படுத்தி விட்டாய்!

ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இவள் தான் என்று மனம் முடிவு செய்த பின்னே இல்லை! இல்லை! இது மாற்றான் உடமை என்று அறிவு சொன்னால் எப்படி என் மனம் ஏற்று கொள்ளும்?

மேகத்துள் அகப்பட்ட நிலவியப் போல என் மனம் நின் மேல் கொண்ட காதலால்
ஒரு சுவடும் இல்லாமல் " இல்லாது போயிற்றே!" எப்போது இந்த மேகங்கள் விலகும்? எப்போது என் மனதை திரும்ப பெறுவேன்?

என் உள்ளத்தில் காதலை மிக நேர்த்தியாக பயிர் செய்து விட்டு அதனை நீயே பிடுங்கி எரிந்து விட்டாய்!. என்னே உன் சீர்மை!

பாகம் ௩

நீ நேற்று எங்கோ உன் நண்பர்களைக் காண செல்கிறேன் என்று சொல்லி நம் வழக்கமான பாதையை விட்டு விலகிச் சென்றாய்! ஏனோ! கண்ணே அது தான்
என் வழி! என்று சொல்ல இயலாமல் உன் மனத்தையே பின் தொடர்ந்து வந்ததை நீ அறிவாயோ!

ஒன்று நிதர்சனம் ! உன் நிலையை என் அறிவு ஏற்றுக் கொண்டது. ஆனால் என் மனம்? அது என் சொல் கேளுமோ?

ஐயோ! உன்னை நினைத்திருந்த இக்காலத்தில் இறையை நினைத்திருந்தால் முக்தியேனும் வாய்த்திருக்கும்!

பெண்களெய் திருமணம் ஆகிவிட்டால் தாலி கட்டிக்கொள்வது போல் தயவு செய்து ஒருவனை உங்கள் மனம் ஏற்று கொண்டவுடன் ஏதாவது ஒரு அடையாளத்தை வைத்து கொள்ளுங்கள் !

இல்லையேல் என்னைப் போன்று எத்தனையோ பேர் மனம் கலங்கி நிற்க வேண்டிய நிலையை உண்டாக்கிய பாவம் உங்களை சேரும்.

கண்ணே ! நீ இப்போதே சொல்லி விட்டாய் உன் நிலையை! ஒரு வேளை இன்னும் சில காலம் கழித்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்பதை என்னால் நிச்சயம் சிந்தித்து பார்க்க முடியவில்லை.

வந்தாய்! வென்றாய்! சென்றாய்!----------வீழ்ந்து விட்டேன்!

Wednesday, October 1, 2008

computer engineers earn more????

Recently I have seen a blog from the computer engineer who had written an article why computer engineers earn more.

The following main reasons are:

They are innovative.

They are thinking leaders.

On the other hand other people like teachers, doctors, bankers earn less because

Teachers are the once who do the same thing.............

bankers do not need any knowledge...


But the right reason for the people who are called computer engineers earn MORE  because they
work for USA and other countries where the currencies of those countries are more valued than INDIAN RUPEE>>>>>>>>>>.

In fact all these people will loose JOBS if these countries stops outsourcing.
And they will be earning the same way as we (the normal people) earn.

Let us pray to god that the OUTSOURCING continue so that we have many people in INDIA who are richer.Monday, August 11, 2008

நல்ல நீயா நானா

நீயா நானா நிகழ்ச்சி பற்றி சில நாட்கள் முன் ஒரு வலை பதிவு பார்த்தேன். அதில் கோபிநாத் அவர்கள் பங்கேற்பவரை பயமுறுத்துகிறார் என்றும் மேலும் அவரை சிந்தனை குழப்பத்திற்கு உள்ளாக்குகிறார் என்றும் சொல்ல பட்டது.

இதற்கான நிரூபணம் சமீபத்திய நீயா நானாவில் தெரிய வந்தது. தனக்கு தேவையான கருத்துகளை பெறுவதற்காக மிகவும் சீண்டும் விதத்திலும் உணர்ச்சிகளை கிளர்ந்து எழ செய்யும் வகையிலும் பங்கேற்பவரை மிக மோசமாக வற்புறுத்துகிறார். இதை போன்ற நிகழ்வுகளை அவர் வரும் நிகழ்ச்சிகளில் தவிர்ப்பார் என்று நம்புவோமாக.

Tuesday, April 22, 2008

பட்டி மண்டபத் தமிழ்

பட்டி மண்டபம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே பட்டி மண்டப நிகழ்வு பதிவுகளை இறக்கம் செய்து பார்த்து மகிழ்வேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பட்டி மண்டப நிகழ்வுகள் தரம் தாழ்ந்து விட்டன என்பதை பலர் எளிதில் ஒப்புகொள்வீர். நேற்று கல்யாண மாலை பட்டி மண்டபம் பார்த்து கொண்டு இருந்தேன். நான் நடுவர் வழங்கிய தீர்ப்பு பகுதி மட்டும் பார்க்க முடிந்தது. நடுவர் அவர்கள் மிகஉம் அழகாக தனது தீர்ப்பு வழங்கினார். ஆனால் அவரால் தமிழ் தான் தலை குனிந்தது. அவர் பல்வேறு தமிழ் சொற்களை விடுத்து ஆங்கில சொற்களை மிக சரளமாக பயன்படுத்தி தமிழர் பண்பாடு குறித்து பெருமை கொண்டார். அவர் பயன்படுத்திய ஆங்கில சொற்கள் ஒன்றும் தமிழ் மொழி பெயர்ப்பு இல்லாதவை அல்ல. குறிப்பாக சொன்னால் ஒரு வேளை தமிழில் அவற்றை சொல்லி இருந்தால் இன்னும் சுவை பெற்று இருக்கும். மெசேஜ் , cheif guest என்ற அழகிய சொற்களை பயன் செய்தார். தமிழ் பட்டி மண்டப நிகழ்வுகள் பெரும்பாலும் இத்தகைய நிலைகள் தான் உள்ளன. தமிழை துன்புறுத்துவதில் திரை உலகினருக்கு இவர்கள் சலைக்கதவர்கள் என்று பலமுறை நிறுவி வருகின்றனர்.