Sunday, November 16, 2008

இட ஒதுக்கீடு வேண்டாம்!

இட ஒதுக்கீடு காரணமாகவே முன்னேறிய சமூகத்தினர் தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கவிதையை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு சாதியை இட ஒதுக்கீடு என்ற பெயரில் வளர்ப்பதாக எல்லா மேந்தட்டு மக்களும் கூப்பாடு போடுகின்றனர்.


சமீப காலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரி, பணியிடங்களில் பொது இடங்களான முப்பது சதவீத இடங்களில் எல்லா சமூகத்தினரும் இடம் பெற்ற காரணம் என்ன?

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்!
நீங்களும் நாங்களும் வாழும் இந்த சமூகத்தில்

ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒதுக்கி வையுங்கள்!
பிறப்பு முதல் இறப்பு வரை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் சாதி மட்டுமே முக்கிய பிரிவாக இருக்கின்றது!

இங்கு உள்ள எல்லா மக்களும் நாங்கள் சாதி பார்க்காமல் சாதகம் பார்க்காமல்
சடங்குகளுக்கு உட்படாமல் திருமணம் செய்து கொள்ளுவோம்.
எங்கள் பிள்ளைக்கு எந்த சாதியின் அடையாளத்தையும் புகுத்த மாடோம் என்று உங்களால் உறுதி கொடுக்க முடிந்தால் எண்ணி பத்தே ஆண்டுகளில்

இட ஒதுக்கீடு என்பது இல்லாததாகி விடும்.


பேருந்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
பணியிலும், பர்லிமேன்டிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
ஏனென்றால் எங்கள் வீட்டு பெண்களும் வாய்ப்பு பெறுகின்றனர்!

ஆனால் தலித்துக்கு இட ஒதுக்கீடு என்றால் தரம் தாழ்ந்து விடும்?
என்ன ஒரு சுயநலம் எங்களுக்கு?

Saturday, November 15, 2008

oadam

மனம் என்னும் தோட்டம்

மனம் எப்போதும் தூய்மையே செய்ய என்ன வேண்டும்!
யாரோ ஒருவன் எப்படியோ போனால் என்ன என்று
விரக்தி நிலை அடைந்தால் அது நம் எண்ணம்
பிறக்கும் மனதை நிச்சயம் பாதிக்கும்.

வழியில் யாரோ வலியால் துடிக்க நமக்கு என்ன என்று போவதில்
நம் கையால் ஆகாத்தனம் மட்டுமே வெளிப்படும்!
ஆனால் அவன் துன்பம் அவனுக்கு தேவையானதே என்று நினைத்தால்?
நம் மனத்தில் எதோ விலங்கு எண்ணம் வந்து விட்டதன் அடையாளமே இது!

பாரதியும் மற்றும் சமூக சிந்தனையாளரும் நமக்கென்ன என்று விட்டு
சென்றிருந்தால் நாம் சமூகம் இன்னும் கீழேயே இருந்திருக்கும்.

வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரின் மனம் இல்லாவிடினும் தன்
முன்னால் துன்பப் படும் மனிதனைக் கண்டு மனத்தில் ஒரு சிறு சலனமும்
இல்லையானால்?

நம் மனம் என்னும் தோட்டத்தில் ரோஜாக்கள் பூக்காவிட்டால் பரவாயில்லை!
கற்றாளை பயிர் செய்யாமல் இருப்போம்!


இன்று அயலான் வீடு பற்றி எரிகிறது என்று வாளாயிந்தால் நிச்சயம்
நாளை நம் வீடு பற்றி எரியும்போது பார்க்க நாம் இருக்க மாட்டோம்!

நம் மனதை எப்போதும் மனித நலனில் அக்கறை கொண்டதாக வைப்போம்!
இல்லையெனில் நாம் மனிதனா என்று நம் வருங்காலம் நம்மை எள்ளி நகை செய்யும்!

மனதில் வளர்ந்து விட்ட களைகளை இனியாவாது பிடுங்கி எறிவோம்!
மனிதனாக வாழ முயல்வோம்!

Thursday, November 13, 2008

கற்பனை

கற்பனை வாழ்க்கை

பள்ளிக்கு சென்றேன்
கல்லூரிக்கு சென்றேன்
வேலைக்கு சென்றேன்
கல்யாணம் செய்தேன்
குழந்தை பெற்றேன்
வளர்த்தேன்
வாழ மட்டும் மறந்தேன்!


தற்கொலை!

தன்னை அழித்து
தன் சொந்தங்களை
துடிக்க செய்து
இறப்பது எந்த வகையில்
மானுடம்!

மானம்
மானம் அழிந்தபின் வாழாதே!
அது சரி மானம் என்பது என்ன?


காதல் தோல்வி!

ஒருவரை ஒருவர் வெறுத்து வாழும்
வாழ்வில் பயன் என்ன?
என்னை நோக்கி நீ புன்னகை
நான் என்ன செய்ய வேண்டும்?


நிலவின் மிச்சம்!

உன் முகம்?நாட்கள்!

ஓடும் கடிகார முள்ளுடன்
போட்டி போட முடியாமல்
கடத்துகிறேன் நாட்களை!


மழை!

பெய்யும் போது சுகம்!
வீடில்லாத தெரு வாசிக்கு?


நட்பு!

என்ன கொடுத்தால் பெறலாம்?
மாறாத கட்டுப்பாடில்லா அன்பு கொடுத்தால்!

தாய்!

எப்போதும் அன்பினைக் கொடுத்து
அன்பினை மட்டுமே ஏற்கும் ஆலயம்!

உலகம் அன்பு மயமாகும்!
எல்லோரும் தாய்மை அடைந்தால்!

Wednesday, November 5, 2008

சிந்தை

மாந்தர் அன்பு

மண்ணில் வாழும் எல்லா மக்களும் நட்போடு வாழ வழி செய்ய வேண்டும்!
விண்ணில் நாம் செலுத்தும் கோள்கள் நம்மை ஒருவரோடு ஒருவர்
கலந்த பேச வழி செய்கிறது!

நாம் ஏன் மனத்தளவில் பிரிந்து வாழ வேண்டும்?
எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழ்தல் நமக்கு நன்மையன்றோ!

உன்னைப் பெற்றவளும் என்னைப் பெற்றவளும் நம் நலன் நாடி வாழ்ந்தார்!
நம்மில் ஒருவரை ஒருவர் பகைத்தால் அவர் தம் உள்ளத் தவிப்பு என்ன செய்யும்?

கண்ணில் ஒன்றை ஒன்று பகைத்து வேறு காட்சி கண்டால் வருவது தலைவலி!
நம் எண்ணக் குளறுபடி நமக்குத் தரும் மனத்தில் வலி!

நாம் வாழ்வது நம் சந்ததிக்காக!
நம்மை நாம் வெறுத்தால் நம் சந்ததி எப்படி வாழும்?

திறக்கட்டும் நம் உள்ளக்கதவு !
குடியேரட்டும் அதில் மாந்தர் எல்லாம்!

கைகள் விரிந்து அணைக்கட்டும் ஆருயிரை எல்லாம்!
பார்வை விரியட்டும் மண்ணில் உள்ள மக்கள்
எல்லோரையும் தாய்மையோடு நோக்க!

என் பாதை எப்போதும் வழி தரட்டும் எல்லோருக்கும்!

உன் பேச்சு

நீ பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை!
என்னை அலட்சியம் செய்வதாய் இருப்பினும்!

உன்னிடம் எனக்கு பிடித்ததும் பிடிக்காததும் ஒன்றே!
உன் தற்பெருமை!

உன் மொழி ஆற்றல் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது!
இத்துனை கோபத்தில் சொற்களை கோர்க்கலாமா!

உனக்கு பிடித்த கவிதை வரிகளும் என்னைக் கள்
குடித்த போதை கொள்ளச் செய்கின்றன!

உன் அழகிய இதழ்ப் பூ உதிர்க்கும் சொற்கள் அத்தனையும்
சேகரிக்க என்னிடம் இல்லை பை!

மலர்கள் எப்போதும் அழகாய் இருந்தாலும் நீ மட்டும் ஏன்
சில நேரங்கள் கோபம் கொள்கிறாய்!

உன் மனதுள் இருக்கும் என்னை உன்னால் எதிர்த்துப்
பேச முடியுமா?