Wednesday, September 23, 2009

சைவம் சரியா ? தவறா ?

தயவு செய்து எனது முந்தைய பதிவு
பால்
பார்த்து விட்டு இங்கு வாருங்கள். இதற்கான பின்னூட்டங்களையும்.

கன்றின் பால் மனிதன் பருகலாமா?
தாவரங்களும் உணர்வுகள் வெளிப் படுத்துபவை.
தயிரில் ஈஸ்ட் உள்ளது(இதற்கும் உணர்வுகள் உண்டு).

என்ன விடை இவற்றிற்கு?

நாம் உண்ணும் எல்லாமும் செரிக்க நமது வயிற்றில் நொதிகள் சுரக்கின்றன. பல ஒட்டுண்ணிகள் நமது வயிற்றில் வாழ்ந்து நம் உணவு செரிக்க உதவுகின்றன.

நாம் உண்ணும் தாவர உணவுப் பொருட்களின் செல்சுவர்கள் உடைக்கபட்டே நமது உணவு செரிக்கப் படுகிறது. அதாவது நம் வயிறு எதையும் விலங்கு செல்லாக்கியே ஏற்றுக்கொள்கிறது.

நாம் என்ன செய்யலாம்?

சைவ உணவு மட்டும் உண்போர் உயர்ந்தோர் என்ற கொள்கை உடையவர் பற்றி நாம் என்ன சொல்வது?

நாம் தாவர உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதால் நம்மால் நமது சுற்று சூழலுக்கு ஓரளவு நன்மை செய்ய முடியும். மனிதன் தான் உண்ணும் உணவுக்காக கொள்ளும் உயிர்களின் பராமரிப்புக்காக மிக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. (இங்கு செலவு என்பது மின்சாரம் உள்ளிட்ட நாம் எளிதில் திரும்ப பெறமுடியாத பல உட்பட)

பிளாஸ்டிக் இல்லாமல் நம் சமூகம் வாழ்வது சாத்தியமா?
அதே குறைந்த அளவு மட்டும் இவற்றை பயன்படுத்தலாம் என்றால் நமக்கு தானே நன்மை?

புஷ் சொன்னார் இந்தியர்கள் பணம் படைத்தவர்கள் ஆனதால் மிக அதிக மாமிசம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று. இது உண்மையே. நமது ஆசை என்பது வேறு . தேவை என்பது வேறு.


உயிர்களின் மூலம் வரும் உணவுகளை நாம் குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.


!!!

No comments: