Wednesday, September 16, 2009

மடி கணினி அமேசான்

மடி கணினி அமேசான்

நண்பர்களே,
சமீபத்தில் நான் லெனோவோ மடிக் கணினி வாங்க அமேசான் பயன் படுத்தி அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்தேன். இதை செய்யும் போது எனது பில்லிங் முகவரியில் சிறு மாற்றம் செய்தேன்.pin code
தவறாக வந்ததால் இந்த திருத்தம் செய்தேன். ஆனால் அதற்கு எனது கணக்கே நிறுத்தப் பட்டுள்ளது. அவர்களுக்கு எனது புதிய முகவரியை நான் மேலும் பல விவரங்களுடன் நிரூபிக்க வேண்டுமாம். இது மட்டும் இல்லாமல் நான் fax மட்டுமே அனுப்ப வேண்டுமாம். இந்த அட்டையே ஒரு debit card . இதில் பணமும் எடுத்து இருக்கிறார்கள். நான் இருப்பதோ ஆங்கிலம் தெரியாத ஐரோப்பிய நாட்டில். (இங்கு தான் எனது வங்கி கணக்கு உள்ளது). இதனை நான் எப்படி சரி செய்வது எனத் தெரியவில்லை.

எனவே நண்பர்களுக்கு எனது ஆலோசனை. சின்ன சின்ன தவறுகள் பில்லிங் முகவரியில் இருந்தாலும் திருத்த முனையாதீர்கள். வேண்டுமானால் இதனை அவர்களுக்கு ஈமெயில் அனுப்பி தெரியப் படுத்துங்கள்;

அவர்களே அதனை மாற்றும்போது நமக்கு இந்த தொல்லை எதுவும் இருக்காது.

இபோது எனது பணம் எப்படி திரும்ப வரும் என்று தெரியவில்லை.

No comments: