பாரதி ஏன் தாஜ்மஹால் பற்றி எழுத வில்லை?
பாரதி எழுதாத எத்தனையோ விஷயங்கள் உண்டு. அவற்றில் இது ஒன்று.
அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்ப்பதே நமக்குப் போதும்.
அவர் எழுதிய இலக்கியம் பற்றிய புரிதல் நமக்குப் போதும்.
வள்ளுவரும் புதிரானவர் தான். அவரும் பல்வேறு குரல்களில் முரண் போல் தோன்றும்
கருத்துகளை வலியுறுத்துவார் .
புலால் உண்ணக் கூடாது என்று சொன்னவர் உலகோடு ஒட்டி வாழ சொன்னார்.(அப்போது நிச்சயம் நிறைய பேர் கறி உண்டு இருப்பர்). எப்படி ஒட்டி வாழ்வது. துறவு பற்றி எழுதியவர் சமூகத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் வாழலாம் என்றும் சொல்லி சென்றார்.
ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் சிலவற்றை பற்றி அறியாமலே இருந்து விடுவர். அறிந்து இருந்தாலும் அதைப் பற்றிய அக்கறை இன்றி வாழ்ந்து விடுவர்.
பாரதி தெய்வம் நமக்கு துணை என்றும் சொன்னார். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழிக்கவும் சொன்னார். பகைவனுக்கு அருள்வாய் என்றும் சொன்னார். o ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக சரியானவை. பார்க்கும் பார்வை மாறுபடும்.
தமிழ் மொழியை கொண்டாடியவர் தெலுங்கில் இசை மிகச் சிறப்பு என்றார்.
தமிழ் இசைக்காக மக்கள் அணி திரண்டபோது முதலில் நின்றவரும் அவரே.
கடவுள் வேண்டுவோருக்கும் அவர் கவிதை உண்டு. பகுத்தரிவாளருக்கும் அவர் கவிதை(ஞானப் பாடல்கள்) உண்டு.
ஆரிய வேதம் கொண்டாடியவர் வேதம் எதுவும் பயனில்லை என்றும் சொல்லி இருக்கிறார் .
அவரின் சிந்தனைகள் வியப்பளிப்பவை.
Wednesday, September 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment