நீயா நானா !
உணர்வுடன் வாழ்வது சரியா? தவறா?
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தேன். உணர்வுகளை வெளிக்காட்டி வாழும் மனிதர்கள் பற்றிய நிகழ்ச்சியாக அது இருந்தது.
ரயில் நட்பு, உறவுகளின் பிணைப்பு, பணியிட நட்பு என்று நாம் சமூகத்தில் கொள்ளும் தொடர்புகளில் நம் உணர்வு வெளிப்படும் வண்ணம் வாழ்வது சரியா?
குறிப்பாக தமிழ் உணர்வுடன் வாழ்வது சரியா?
ஒன்றின் மீது நாம் நெருக்கம் கொள்வது, அல்லது வெறுப்பு காண்பிப்பது சரியா?
மனிதன் உணர்வுகளுடன் இருப்பது சரியா?
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன தந்தை இறந்த அன்றுகூட தான் அழவில்லை என்றார். இன்னொருவரோ இவர் தந்தை இறந்தது தமக்கே துயர் தருவதாக இருந்தது என்றார்.
உணர்வுகளை வெளிகாட்டுபவர் தன் கடமையில் இருந்து தவறி விடும் வாய்ப்பு உள்ளது என்று சிலர் கூறினர். இன்னும் சிலர் இறப்பு நிகழ்ந்த வீட்டில் பொய்யாக பெரும்பாலானவர் அழுவதாகவும் இது சரியல்ல என்றும் வாதம் செய்தனர்.
நமது உணர்வுகளை எப்போது தான் வெளிக்காட்டுவது? உன்வர்வினை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தா விட்டால் அந்த வாய்ப்பே நமக்கு மீண்டும் கிடைக்காது என்று ஒருவர் சொன்னார்.
பணம் அதிகம் சம்பாதிக்க நினைப்பவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாது என்றும் சொன்னார்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்தி அடுத்தவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக சிலர் சொன்னார்கள்.
எது எப்படியோ தம் அருமை குழந்தை அன்பு மழலை பேசும்போது அதை வாரி அணைத்து உச்சி முகர்ந்து மகிழாத மனிதன் என்ன செய்து என்ன பயன்?
தம் நண்பன் படும் துயரில் தம் மனத்தளவிலேனும் பங்கு கொள்ளாத நட்பு என்ன நட்பு?
தம் கண் முன் நிகழும் நிகழ்வுகளை உள்வாங்கி தம் உணர்வுகளை வெளிப்படுத்தாத மனிதன் என்ன மனிதன்?
வாழ்வது தமக்காக இருப்பினும் தம் உறவுகளின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளாத மனம் என்ன மனம்?
!
!
Thursday, September 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment