அன்பு செய்வோம்!
எல்லோரும் தாய்மை அடைந்தால் உலகே அன்பு மயமாகி விடும்.
என் சொந்தம் என்று இந்த உலகை யாரால் நினைக்க முடிக்கிறதோ அவரால் தான் சுயநலம் இல்லா(விரிவடைந்த சுயநலம்) நிலை எய்த முடியும்.
இந்த நிலை அடைய எனது எதிர்காலத்தின் மீது எனக்கு பயம் இருக்க கூடாது.
என் பிள்ளை என் துணை இல்லாமல் இந்த சமூகத்தில் இயல்பாக வாழ்வான் என்ற நம்பிக்கை வந்து விட்டால் நான் சொத்து சேர்க்க மாட்டேன்.
ஆனால் இது எந்த காலத்தில் நடக்கும்?
ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றவேண்டும்?(தன் எதிகாலம் மீது நம்பிக்கை இல்லாதவனே இந்த செயல் செய்வான்)
ஆனால் நாம் வாழும் உலகில் இது சாத்தியமா? ஆனால் விலங்குகள் இந்த நிலை பெற்று தானே உள்ளன?
தன் நலம் மட்டும் விட்டு தன் குழுவின் நலனுக்கும் ஒருவனது உழைப்பு பயன் பட்டால் அவன் மகாத்தமா ஆகிறான்.
அதாவது மனிதன் தன் இயல்பு நிலையில் இருப்பதே மகத்தான நிலை.
காதல் வாழ்வு எந்த வகையிலும் இந்த உயர்வை அடையாது. உலக வரலாற்றைப் பார்த்தால் காதல் தோல்வி பெற்றவர் அனைவரும் தமது தன்முனைப்பு காரணமே காதலில் வலுவாக இருந்தனர் என்று அறியலாம்.
பெரும்பாலான பெண்கள் தம் குழந்தைக்கு உயர்வான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். தம் சொந்த தமக்கை(தங்கை) பிள்ளைகளின் நலனைக் கூட பொறாமையோடே அணுகுகின்றனர்.
தாய்மை என்பது தம் பிள்ளை என்பதை விடுத்து ஒன்று பட்ட இந்த உலகையே தம் உறவாக எண்ணி செயல்படுபவரிடம் மட்டுமே வாய்க்கும்.
இப்படி நினைத்த மனிதர்களே வரலாற்றில் மக்களால் போற்ற பட்டனர்.
தாய்மை என்பது இனம் கடந்து, உயிர் நிலை கடந்து எல்லாமும் கடந்ததாக மட்டும் இருக்க முடியும்.
இந்த நிலை அடையாத நாம் எந்த காலத்திலும் எதிர்கால பயத்துடனே வாழ்வை எதிர் கொள்வோம். மனித வாழ்வும் இப்படியே அழிந்தும் போகும்.
குறைந்த பட்சம் நம் கண் முன்னால் தெரியும் உயிர்களை அன்புடன் நேசிப்போம். கசாப்பு கடைக்காரன் ஆட்டின் மீது காட்டும் கருணை அல்ல நான் சொல்வது.
எல்லோரும் இன்ப வாழ்வு வாழ நினைப்பதுவே தாய்மையாக இருக்கும்.
Thursday, September 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment