Thursday, January 23, 2025
அம்பத்தூர், சென்னை பெயர்க் காரணம்
அம்பத்தூர் என்ற அழகிய ஊர், பழைய நகராட்சிகளில் ஒன்று. இது சென்னை மாநகரின் ஒரு மண்டலமாக சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்கப்பட்டது.
பல்வேறு தொழில்கள் செய்யப்படுகின்றன இங்கே உள்ள தொழிற்பேட்டையில்.
இருந்தாலும் அரசு கல்லூரி, மாணவர்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி அரசு மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் இங்கு இல்லை.
சாலைகள் ஒழுங்கற்று உள்ளன. சரியான மேம்பாடுகள் இல்லை.
அமைச்சர் தொகுதியாகவும், அருகமைந்த ஆவடித் தொகுதியில் அமைச்சர் இருந்தாலும் சரியான முறையில் மேம்பாட்டு பணிகள் இல்லை.
அம்பத்தூர் என்ற பெயர் ஏன் இந்த ஊருக்கு?
தேடிய போது!
சிலர் 108 சக்தி பீடங்களில் ஒன்றான 51 சக்தி பீடத்தை குறிக்கும் வகையில் அம்பத்து ஒன்றாவது ஊர், அம்பத்தூர் ஆனதாக சொல்கிறார்கள்.
அம்பத்தூரில் சக்தி பீடம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு சிலர் அம்பு அறுந்து, அற்ற பகுதி குறிக்கும் வகையில் அம்பத்தூர் என்கிறார்கள். இது தொடர்பான கதை ஏதோ புராணக்கதையாக இருக்கலாம்.
உலகூர் என்ற பெயர் பல ஊர்களுக்கு வைக்கிறார்கள்.
அது போலவே உலகைக் குறிக்கும் அம்பலம்+ ஊர் என்று சேர்ந்த அம்பலத்தூரில் இருந்து அம்பத்தூராகத் திரிந்திருக்கலாம் என்றும் கருதலாம்.
எண்ணைக் கொண்டு பெயர்க் காரணம் சொல்லவேண்டுமானால், சென்னை 53, அம்பத்து மூன்றாம் ஊர், அம்பத்தூராகி இருக்கலாமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment