நம் வாழ்வில் திருக்குறள் அப்படியே கடைப் பிடிக்க முடியுமா?
நம் அன்றாட வாழ்வில் எதிர்வரும் சிக்கல்களுக்கான தீர்வுகள் திருக்குறளில் பெறலாம். ஆனால் அந்த தீர்வுகள் இன்றைய வாழ்வில் ஏற்புடையதா?
திருவள்ளுவர் என்ற தனி மனிதர் ஒரு உயர்ந்த சமூகம் கடைபிடிக்க வேண்டிய அல்லது அங்கு இருக்க வேண்டிய அடிப்படை அறக் கூறுகளாக வேண்டியவற்றை பட்டியல் செய்துள்ளார்.
இவற்றை நாம் கடைபிடிக்க முடியுமா?
முதலில் திருக்குறளில் எனக்கு சிந்தை செய்ய வேண்டிய சொல்லாக்கமாக "உயர்குடி" வருகிறது. திருவள்ளுவர் உயர்குடி மக்களின் பண்பாக எல்லா ஒழுக்க நிலைகளையும் பட்டியல் செய்துள்ளார். நாம் வாழும் இந்த சமூகத்தில் உயர்குடி பிறப்பால் வருவது, திருவள்ளுவர் சொல்வதோ "வாழ்வின்" வழி வருவது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற மனித சிந்தனையாளன் அவன். அந்தணரை மற்றும் நிச்சயம் போற்றமாட்டான். அந்தனர் என்று ஒருவன் சொள்ளத்தக்கவனாவது அவனது செய்கையால் மட்டுமே(பிறப்பால் அல்ல).
யாரும் அந்தனர் ஆகலாம்(திருவள்ளுவரின் லட்ச்சியம் சமூகத்தில்)
மழித்தலும், நீட்டலும் இங்கு தேவையில்லை. நீ மனிதன் ஆனால்!
"பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் " யார் இங்கே?
"புறங்கூறாமை" என்ற நல்லொழுக்கம் பெற்றவர் யார்?
வறியோரை அன்புடன் நோக்கும் அன்பு நிலை எங்கு?
பணம் பெற்றோரை மட்டுமே நாம் மதிப்பது மாறுமா?
பிச்சை மட்டும் எத்தனை காலம் இன்னமும் போட்டுக்கொண்டே பிச்சைக்காரர்களாக எவ்வளவு காலம் வாழ்வோம்?
காதல் வாழ்வை வலியுறுத்திகிறார் இவர். திரு சாலமன் பாப்பையா அவர்கள் "இந்த சமூகத்தில் காதல் மணங்கள் சிக்கல் ஆனவை" இளைஞர்கள் காதல் செய்வது நல்லதல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்.
வள்ளுவர் சொன்னவை எல்லாம் நாம் கடைபிடிக்க அல்ல.
ஒரு வேளை இந்த சமூகம் தன்னை முன்னோக்கி செலுத்த முயன்றால் இந்த சுவடியை வழிகாட்டியாக கொள்ளட்டும் என்று விரும்பி இருக்கிறார். அவ்வளவு தான்.
எப்போது திருவள்ளுவரின் இந்த லட்சிய சமூகம் சாத்தியம்?
Wednesday, September 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//திருவள்ளுவர் என்ற தனி மனிதர் ஒரு உயர்ந்த சமூகம் கடைபிடிக்க வேண்டிய அல்லது அங்கு இருக்க வேண்டிய அடிப்படை அறக் கூறுகளாக வேண்டியவற்றைப் பட்டியல் செய்துள்ளார். //
திருவள்ளுவர் என்ற மாமனிதர், மனிதன் தான் எந்நிலையில் இருந்தாலும் அவற்றிலிருந்து உயர்ந்த வாழ்க்கை நோக்கி வாழ்வாங்கு வாழ்வதற்கு உலகிற்கே வ்ழிகாட்டியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். வள்ளுவத்தைவிட சிறந்த வாழ்வின் வழியை வேறு எங்குத் தேடினும கிடையா என்பது திண்ணம். ஆகவே யாவரும் வள்ளுவ வழியிலே செல்வது அறியுடைமையாகும். இங்கே தன் விருப்பு வெறுப்புக்கு உரிமை இல்லை.
நன்றி.
Post a Comment