சமீபத்தில் கலைஞர் அவர்கள் தான் சிறுவனாக இருந்தபோது
திரு கிருபானந்த வாரியாரை அசைவம் ஏன் சாப்பிடக்கூடாது
என்று கேட்டதாகவும் அதற்கு வாரியார் அவர்கள் "உயிர்களை கொல்லக்கூடாது" என்றாராம்.
கலைஞர் மீண்டும் "கீரை தானியங்கள் இவைகளுக்கும் உயிர் உண்டல்லவா?"
என்று கேட்டார். வாரியார் பதில் சொல்ல வில்லை.
அசைவம் என்று நாம் சொல்லும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் 'வலியை' உணரக் கூடிய உயிர்களில் இருந்து பெறப் படுகின்றன. உயிர்களை துன்புறுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இவற்றைப் பயன் படுத்த மாட்டார்.
பால் பெறுவது அந்த உயிருக்கு வலியைத் தருவதில்லை. மேலும் கன்றுகளை பசியால் வாட விட எந்த மனிதனும் விரும்ப மாட்டான்.
இதைப் போல் முட்டைகளையும் சைவத்தில் சேர்க்கலாம்.
தோல் பொருட்களை மனித சமூகத்தில் எல்லோரும் பயன் படுத்துகிறோம். (இங்கு சைவம், அசைவம் நாம் பார்ப்பதில்லை. )
வெளி நாடுகளில் இறைச்சியை மிக சிறப்பாக பதப் படுத்துகின்றனர். இதற்கு மிக அதிக அளவில் நாம் ஆற்றலை வீண் செய்ய வேண்டி உள்ளது.
மேலும் இறைச்சிக்காக வளர்க்கப் படும் விலங்குகளை நாம் அவற்றின் இயல்போடு வாழ விடுவதில்லை. அவற்றின் உணவுக்காக நாம் மிக அதிகமான தாவர
உணவுப் பொருட்களை நாம் பயன் படுத்துகிறோம்.
இறைச்சி உருவாக்க நாம் செய்யும் செலவினை(ஆற்றல், மனித வளம், தீவனம்,...) நாம் சரியாக பயன் படுத்தினால் உலகில் பட்டினி இல்லாத சமூகத்தை நாம் உருவாக்கி விடலாம்.
விலங்குகளில் இருந்து எந்த வகையிலும் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளாத மக்களும் உள்ளனர்.
தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று சொன்னாலும் நாம் விலங்குகளுக்காக மேலும் அவற்றை அழிப்பதை நோக்கும்போது தாவர உணவுகள் மட்டும் உண்பது சற்றுப் பரவா இல்லை.
மீன்களுக்கு நாம் எந்த உணவும் இடுவதில்லை. அவை கடலில் இருந்து கிடைக்கும் சைவ உணவு என்று சொல்பவரும் உள்ளனர்.
சைவம், அசைவம் அவர் அவர் பார்வைக்கு உட்பட்டது.
என்னைக் கேட்டால் இறைச்சி உண்பது ஆடம்பரம், (five star hotal சாப்பாடு போல)
!
!
!
Thursday, September 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
\\\பால் பெறுவது அந்த உயிருக்கு வலியைத் தருவதில்லை. மேலும் கன்றுகளை பசியால் வாட விட எந்த மனிதனும் விரும்ப மாட்டான்.//
என்ன தான் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலும் தாய்ப்பால் ஈடாகுமா??
தம்பி அன்பு,
இங்கு தாய்ப் பால் நல்லதா? புட்டிப் பால் நல்லதா? என்று நீங்கள் கேட்கலையே.
நாம் எல்லோரும் குறித்த வயது வளர்ந்ததும் தாய் பால் கிடைக்காதே.
அப்போது நமக்கு தாயாக இருப்பது இந்த பசுக்களும், எருமைகளும் தானே!
"ஆவின்"(avin) பால் பசுவில் இருந்து மட்டும் வருவதல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
\\\என்ன தான் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தாலும் தாய்ப்பால் ஈடாகுமா??\\\
என்பது என்னவென்றால் என்ன தான் நீங்க கன்றுக்குட்டியை நல்லா கவனிச்சாலும் அது அந்த மாடு தருகின்ற பாலுக்கு ஈடு ஆகாதே என்பதே என்கருத்து..
அன்பு, நீங்க சொன்னதுக்கு நான் உடன்படறேன்
இது தொடர்பான எனது இடுகை நீங்க சைவமா அசைவமா?
தாவரங்கள் எப்படியெல்லாம் மனிதர்களால் கொடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டு கடைசியில் உண்ணப்படுகின்றன அப்படின்னு ஒரு எட்டு http://www.vegetablecruelty.com/gallery/?show=1க்கு போய் பாத்துருங்க.
(இளகிய மனம் கொண்டோர், இதயநோயாளிகள் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)
பின்னோட்டம் இட்டவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் நன்றிகள்.
நாம் நம் தேவைக்கு மட்டுமே உண்டு வாழ்ந்தாலே நம் சமூகத்திற்கு நாம் நன்மை செய்தவர்களாவோம்.
திரு கோபி, நீங்கள் இந்த பதிவையும் சற்று பாருங்கள்.
http://sarath-sirukathaigal.blogspot.com/2009/09/blog-post_9828.html
ஆ'சைவம்'சம் !
திரு ஆகாயமனிதன்,
என்ன சொல்றிங்க?
சரத்,
உங்களின் "உணவை வீணாக்காதீர்கள்" பதிவை படித்தேன். என்னுடைய கொள்கையும் அதுவே.
விரிவான கருத்தை அந்த இடுகையில் சொல்லியிருக்கேன்.
Post a Comment