தயவு செய்து எனது முந்தைய பதிவு
பால் பார்த்து விட்டு இங்கு வாருங்கள். இதற்கான பின்னூட்டங்களையும்.
கன்றின் பால் மனிதன் பருகலாமா?
தாவரங்களும் உணர்வுகள் வெளிப் படுத்துபவை.
தயிரில் ஈஸ்ட் உள்ளது(இதற்கும் உணர்வுகள் உண்டு).
என்ன விடை இவற்றிற்கு?
நாம் உண்ணும் எல்லாமும் செரிக்க நமது வயிற்றில் நொதிகள் சுரக்கின்றன. பல ஒட்டுண்ணிகள் நமது வயிற்றில் வாழ்ந்து நம் உணவு செரிக்க உதவுகின்றன.
நாம் உண்ணும் தாவர உணவுப் பொருட்களின் செல்சுவர்கள் உடைக்கபட்டே நமது உணவு செரிக்கப் படுகிறது. அதாவது நம் வயிறு எதையும் விலங்கு செல்லாக்கியே ஏற்றுக்கொள்கிறது.
நாம் என்ன செய்யலாம்?
சைவ உணவு மட்டும் உண்போர் உயர்ந்தோர் என்ற கொள்கை உடையவர் பற்றி நாம் என்ன சொல்வது?
நாம் தாவர உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதால் நம்மால் நமது சுற்று சூழலுக்கு ஓரளவு நன்மை செய்ய முடியும். மனிதன் தான் உண்ணும் உணவுக்காக கொள்ளும் உயிர்களின் பராமரிப்புக்காக மிக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. (இங்கு செலவு என்பது மின்சாரம் உள்ளிட்ட நாம் எளிதில் திரும்ப பெறமுடியாத பல உட்பட)
பிளாஸ்டிக் இல்லாமல் நம் சமூகம் வாழ்வது சாத்தியமா?
அதே குறைந்த அளவு மட்டும் இவற்றை பயன்படுத்தலாம் என்றால் நமக்கு தானே நன்மை?
புஷ் சொன்னார் இந்தியர்கள் பணம் படைத்தவர்கள் ஆனதால் மிக அதிக மாமிசம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று. இது உண்மையே. நமது ஆசை என்பது வேறு . தேவை என்பது வேறு.
உயிர்களின் மூலம் வரும் உணவுகளை நாம் குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
!!!
Wednesday, September 23, 2009
திருக்குறள் நமக்கு தேவையா ?
நம் வாழ்வில் திருக்குறள் அப்படியே கடைப் பிடிக்க முடியுமா?
நம் அன்றாட வாழ்வில் எதிர்வரும் சிக்கல்களுக்கான தீர்வுகள் திருக்குறளில் பெறலாம். ஆனால் அந்த தீர்வுகள் இன்றைய வாழ்வில் ஏற்புடையதா?
திருவள்ளுவர் என்ற தனி மனிதர் ஒரு உயர்ந்த சமூகம் கடைபிடிக்க வேண்டிய அல்லது அங்கு இருக்க வேண்டிய அடிப்படை அறக் கூறுகளாக வேண்டியவற்றை பட்டியல் செய்துள்ளார்.
இவற்றை நாம் கடைபிடிக்க முடியுமா?
முதலில் திருக்குறளில் எனக்கு சிந்தை செய்ய வேண்டிய சொல்லாக்கமாக "உயர்குடி" வருகிறது. திருவள்ளுவர் உயர்குடி மக்களின் பண்பாக எல்லா ஒழுக்க நிலைகளையும் பட்டியல் செய்துள்ளார். நாம் வாழும் இந்த சமூகத்தில் உயர்குடி பிறப்பால் வருவது, திருவள்ளுவர் சொல்வதோ "வாழ்வின்" வழி வருவது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற மனித சிந்தனையாளன் அவன். அந்தணரை மற்றும் நிச்சயம் போற்றமாட்டான். அந்தனர் என்று ஒருவன் சொள்ளத்தக்கவனாவது அவனது செய்கையால் மட்டுமே(பிறப்பால் அல்ல).
யாரும் அந்தனர் ஆகலாம்(திருவள்ளுவரின் லட்ச்சியம் சமூகத்தில்)
மழித்தலும், நீட்டலும் இங்கு தேவையில்லை. நீ மனிதன் ஆனால்!
"பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் " யார் இங்கே?
"புறங்கூறாமை" என்ற நல்லொழுக்கம் பெற்றவர் யார்?
வறியோரை அன்புடன் நோக்கும் அன்பு நிலை எங்கு?
பணம் பெற்றோரை மட்டுமே நாம் மதிப்பது மாறுமா?
பிச்சை மட்டும் எத்தனை காலம் இன்னமும் போட்டுக்கொண்டே பிச்சைக்காரர்களாக எவ்வளவு காலம் வாழ்வோம்?
காதல் வாழ்வை வலியுறுத்திகிறார் இவர். திரு சாலமன் பாப்பையா அவர்கள் "இந்த சமூகத்தில் காதல் மணங்கள் சிக்கல் ஆனவை" இளைஞர்கள் காதல் செய்வது நல்லதல்ல என்று தீர்ப்பு கூறுகிறார்.
வள்ளுவர் சொன்னவை எல்லாம் நாம் கடைபிடிக்க அல்ல.
ஒரு வேளை இந்த சமூகம் தன்னை முன்னோக்கி செலுத்த முயன்றால் இந்த சுவடியை வழிகாட்டியாக கொள்ளட்டும் என்று விரும்பி இருக்கிறார். அவ்வளவு தான்.
எப்போது திருவள்ளுவரின் இந்த லட்சிய சமூகம் சாத்தியம்?

Friday, September 18, 2009
உன்னைப் போல் ஒருவன் -- பார்க்க நல்ல படம்

நம்மில் ஒருவர் திடீரென சமூகத்தின் மீது அக்கறை கொண்டு "நீதிபதிகளால் குற்றம் இழைத்தவர்கள் என்று நிரூபணம் செய்யப்பட்டவர்களை " தண்டனை அளிக்க முயலும் கதை.
கொடும் குற்றம் செய்யும் ( தீவிரவாதிகள்) எந்த காலத்திலும் தாங்கள் செய்த குற்றத்திற்கு வருந்த போவதில்லை. மீண்டும் அத்தகைய குற்றம் இளைக்கவே செய்வர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த படம் வெளியிடப் படுகிறது.
இந்த கருத்துக்கு மாறுபட்டவர் நிச்சயம் இந்த படம் பற்றி ஒரு நல்ல விமர்சனம் செய்ய இயலாது.
"மாற்றம் என்பது மட்டுமே மாறாதது"
இந்த கருத்தை இந்த மனிதர்களுக்கும் நாம் பொருத்தி பார்த்தால் ஏன் இவர்களை நம் சமூகம் வாழ அனுமதிக்க கூடாது என்ற கேள்வி எழாமல் இல்லை.
எனினும் கமல் ஹாசன் மற்றும் மோகன் லால் இருவரின் நடிப்புக்கு ஒரு சான்றாக மேலும் ஒரு படம் என்ற வகையில் இந்த படம் ஒரு சமூக படம்.
சுருதி ஹாசன் நன்றாக இசை அமைக்க வில்லை என்று குற்றசாட்டு வைக்கப் படுகிறது.

soru kidaikkuma?
நான் படும் பாடு!
ஐயோ இன்னமும் எத்தனை நாள் இந்த salad என்னும் கருமத்தை தின்று உயிர் வாழ்வது?
paasta, pizza என்று சொல்லி எதோ மாவில் செய்த களிம்பை தின்று மலச்சிக்கல் வந்தது தான் மிச்சம்.
இவர்களுக்கு சைவ உணவுனாலே என்னனே தெரியல. எதோ பசு மாதிரி பச்ச பச்சைய இருக்கறதே திங்க சொல்லி சாவ அடிகிறாங்க.
cheese தந்து தந்து என்னைய கொல்றாங்க. ithu எல்லாம் கொழுப்பு ஏற செய்யாதா?
நான்-veg பார்த்தா எல்லாம் பச்சையா இருக்குற மாதிரியே இருக்கு. அட ஆண்டவா இன்னும் எவ்வளவு நாளைக்கு இவங்க இப்படியே இருப்பாங்க?
என் நாக்கு சுவை அரும்புகள் தம் கடமை செய்ய மறந்து வேளை நிறுத்தம் செய்கின்றன.
அரிசி சோறு தின்றால் உடல் பெருத்து நோய் வந்த உடலோடு இந்த உலக வாழ்வை முடிப்போம் என்று பயமுறுத்தும் மருத்துவர்கள் இந்த மைதா மாவில் செய்த சனியன்களுக்கு எதிராக எப்போது குரல் கொடுப்பார்கள்?
ஏன் பொழுது விடிகிறது என்று எண்ணும் படி செய்த இந்த உணவு வகைகளை மனித குலம் மறந்து போகட்டும் விரைவில்.

Thursday, September 17, 2009
உணர்வுடன் வாழ்வது சரியா? தவறா?
நீயா நானா !
உணர்வுடன் வாழ்வது சரியா? தவறா?
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்தேன். உணர்வுகளை வெளிக்காட்டி வாழும் மனிதர்கள் பற்றிய நிகழ்ச்சியாக அது இருந்தது.
ரயில் நட்பு, உறவுகளின் பிணைப்பு, பணியிட நட்பு என்று நாம் சமூகத்தில் கொள்ளும் தொடர்புகளில் நம் உணர்வு வெளிப்படும் வண்ணம் வாழ்வது சரியா?
குறிப்பாக தமிழ் உணர்வுடன் வாழ்வது சரியா?
ஒன்றின் மீது நாம் நெருக்கம் கொள்வது, அல்லது வெறுப்பு காண்பிப்பது சரியா?
மனிதன் உணர்வுகளுடன் இருப்பது சரியா?
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தன தந்தை இறந்த அன்றுகூட தான் அழவில்லை என்றார். இன்னொருவரோ இவர் தந்தை இறந்தது தமக்கே துயர் தருவதாக இருந்தது என்றார்.
உணர்வுகளை வெளிகாட்டுபவர் தன் கடமையில் இருந்து தவறி விடும் வாய்ப்பு உள்ளது என்று சிலர் கூறினர். இன்னும் சிலர் இறப்பு நிகழ்ந்த வீட்டில் பொய்யாக பெரும்பாலானவர் அழுவதாகவும் இது சரியல்ல என்றும் வாதம் செய்தனர்.
நமது உணர்வுகளை எப்போது தான் வெளிக்காட்டுவது? உன்வர்வினை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் வெளிப்படுத்தா விட்டால் அந்த வாய்ப்பே நமக்கு மீண்டும் கிடைக்காது என்று ஒருவர் சொன்னார்.
பணம் அதிகம் சம்பாதிக்க நினைப்பவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாது என்றும் சொன்னார்கள்.
உணர்வுகளை வெளிப்படுத்தி அடுத்தவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக சிலர் சொன்னார்கள்.
எது எப்படியோ தம் அருமை குழந்தை அன்பு மழலை பேசும்போது அதை வாரி அணைத்து உச்சி முகர்ந்து மகிழாத மனிதன் என்ன செய்து என்ன பயன்?
தம் நண்பன் படும் துயரில் தம் மனத்தளவிலேனும் பங்கு கொள்ளாத நட்பு என்ன நட்பு?
தம் கண் முன் நிகழும் நிகழ்வுகளை உள்வாங்கி தம் உணர்வுகளை வெளிப்படுத்தாத மனிதன் என்ன மனிதன்?
வாழ்வது தமக்காக இருப்பினும் தம் உறவுகளின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளாத மனம் என்ன மனம்?
!

அன்பு செய்வோம்!
அன்பு செய்வோம்!
எல்லோரும் தாய்மை அடைந்தால் உலகே அன்பு மயமாகி விடும்.
என் சொந்தம் என்று இந்த உலகை யாரால் நினைக்க முடிக்கிறதோ அவரால் தான் சுயநலம் இல்லா(விரிவடைந்த சுயநலம்) நிலை எய்த முடியும்.
இந்த நிலை அடைய எனது எதிர்காலத்தின் மீது எனக்கு பயம் இருக்க கூடாது.
என் பிள்ளை என் துணை இல்லாமல் இந்த சமூகத்தில் இயல்பாக வாழ்வான் என்ற நம்பிக்கை வந்து விட்டால் நான் சொத்து சேர்க்க மாட்டேன்.
ஆனால் இது எந்த காலத்தில் நடக்கும்?
ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றவேண்டும்?(தன் எதிகாலம் மீது நம்பிக்கை இல்லாதவனே இந்த செயல் செய்வான்)
ஆனால் நாம் வாழும் உலகில் இது சாத்தியமா? ஆனால் விலங்குகள் இந்த நிலை பெற்று தானே உள்ளன?
தன் நலம் மட்டும் விட்டு தன் குழுவின் நலனுக்கும் ஒருவனது உழைப்பு பயன் பட்டால் அவன் மகாத்தமா ஆகிறான்.
அதாவது மனிதன் தன் இயல்பு நிலையில் இருப்பதே மகத்தான நிலை.
காதல் வாழ்வு எந்த வகையிலும் இந்த உயர்வை அடையாது. உலக வரலாற்றைப் பார்த்தால் காதல் தோல்வி பெற்றவர் அனைவரும் தமது தன்முனைப்பு காரணமே காதலில் வலுவாக இருந்தனர் என்று அறியலாம்.
பெரும்பாலான பெண்கள் தம் குழந்தைக்கு உயர்வான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுகின்றனர். தம் சொந்த தமக்கை(தங்கை) பிள்ளைகளின் நலனைக் கூட பொறாமையோடே அணுகுகின்றனர்.
தாய்மை என்பது தம் பிள்ளை என்பதை விடுத்து ஒன்று பட்ட இந்த உலகையே தம் உறவாக எண்ணி செயல்படுபவரிடம் மட்டுமே வாய்க்கும்.
இப்படி நினைத்த மனிதர்களே வரலாற்றில் மக்களால் போற்ற பட்டனர்.
தாய்மை என்பது இனம் கடந்து, உயிர் நிலை கடந்து எல்லாமும் கடந்ததாக மட்டும் இருக்க முடியும்.
இந்த நிலை அடையாத நாம் எந்த காலத்திலும் எதிர்கால பயத்துடனே வாழ்வை எதிர் கொள்வோம். மனித வாழ்வும் இப்படியே அழிந்தும் போகும்.
குறைந்த பட்சம் நம் கண் முன்னால் தெரியும் உயிர்களை அன்புடன் நேசிப்போம். கசாப்பு கடைக்காரன் ஆட்டின் மீது காட்டும் கருணை அல்ல நான் சொல்வது.
எல்லோரும் இன்ப வாழ்வு வாழ நினைப்பதுவே தாய்மையாக இருக்கும்.

Wednesday, September 16, 2009
பாரதி ஏன் தாஜ்மஹால் பற்றி எழுத வில்லை?
பாரதி ஏன் தாஜ்மஹால் பற்றி எழுத வில்லை?
பாரதி எழுதாத எத்தனையோ விஷயங்கள் உண்டு. அவற்றில் இது ஒன்று.
அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்ப்பதே நமக்குப் போதும்.
அவர் எழுதிய இலக்கியம் பற்றிய புரிதல் நமக்குப் போதும்.
வள்ளுவரும் புதிரானவர் தான். அவரும் பல்வேறு குரல்களில் முரண் போல் தோன்றும்
கருத்துகளை வலியுறுத்துவார் .
புலால் உண்ணக் கூடாது என்று சொன்னவர் உலகோடு ஒட்டி வாழ சொன்னார்.(அப்போது நிச்சயம் நிறைய பேர் கறி உண்டு இருப்பர்). எப்படி ஒட்டி வாழ்வது. துறவு பற்றி எழுதியவர் சமூகத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் வாழலாம் என்றும் சொல்லி சென்றார்.
ஒவ்வொரு மனிதரும் வாழ்வில் சிலவற்றை பற்றி அறியாமலே இருந்து விடுவர். அறிந்து இருந்தாலும் அதைப் பற்றிய அக்கறை இன்றி வாழ்ந்து விடுவர்.
பாரதி தெய்வம் நமக்கு துணை என்றும் சொன்னார். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகம் அழிக்கவும் சொன்னார். பகைவனுக்கு அருள்வாய் என்றும் சொன்னார். o ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக சரியானவை. பார்க்கும் பார்வை மாறுபடும்.
தமிழ் மொழியை கொண்டாடியவர் தெலுங்கில் இசை மிகச் சிறப்பு என்றார்.
தமிழ் இசைக்காக மக்கள் அணி திரண்டபோது முதலில் நின்றவரும் அவரே.
கடவுள் வேண்டுவோருக்கும் அவர் கவிதை உண்டு. பகுத்தரிவாளருக்கும் அவர் கவிதை(ஞானப் பாடல்கள்) உண்டு.
ஆரிய வேதம் கொண்டாடியவர் வேதம் எதுவும் பயனில்லை என்றும் சொல்லி இருக்கிறார் .
அவரின் சிந்தனைகள் வியப்பளிப்பவை.

சமைக்க கற்றுக் கொள்ளுங்கள்
நாம் சமைப்பதால் கிடைக்கும் சில நன்மைகள்:
சகிப்பு தன்மை விரைவில் வந்து விடும்(நம் உணவை நாமே உண்பதே விட சகிப்பு தன்மை வேறு எங்கு தேவைப் படும்?)
தியானம் செய்வதில் ஏற்படும் மன ஒருமையை விட ஒரு நல்ல விருந்து சமைக்கும் போது நமக்கு மன ஒருமை கிடைக்கும்.
என்ன காய்கறி நமக்கு பிடிக்குமோ அதை மட்டும் கொண்டு சமைக்கலாம்
சில பேருக்கு உப்புமா கூட செய்ய தெரியாது. ஆனால் அடுத்தவர் சமைத்ததில் உப்பில்லை என்று சுலபமாக சொல்லி விடுவார். இவர் சமைக்க ஆரம்பித்தால் குறை கூற மாட்டார்
கொழுக்கட்டை சமைப்பதற்கு ஒன்றும் நிறைய தெரிய தேவை இல்லை. ஆனால் நல்ல சாம்பார் வைப்பது மிக கடினம்.
புளி சோறு, எலுமிச்சை சோறு முதலிய விதம், விதமான உணவு சமைக்க (சாப்பிட) அடிப்படையில் நன்றாக இந்த சாறுகளை காய வைக்க தெரிந்தால் போதும்.
காபி வைப்பதெல்லாம் இந்த காலத்தில் கடினம் இல்லை.
ஊர் பேர் தெரியாத நாட்டில் நாம் விரும்பும் வகை உணவு வேண்டுமானால் சமைக்க தெரிந்தால் போதும்
இட்லி செய்வதை விட தோசை சுவையாகவும் சிறப்பாகவும் எளிதில் செய்யலாம்
திடீர் என்று ஊரில் கடை அடைப்பு என்றால் நமக்கு வேண்டிய உணவு சுலபத்தில் நம்மால் சமைக்க முடியும்
வேறு எதில் படைப்புத்தன்மை வருகிறதோ இல்லையோ சமைக்க தெரிந்தவர் விரைவில் புது வகை சமைக்க செய்வார்.
ஆகவே எல்லோரும் அடுப்பங்கரை சென்று கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

மடி கணினி அமேசான்
மடி கணினி அமேசான்
நண்பர்களே,
சமீபத்தில் நான் லெனோவோ மடிக் கணினி வாங்க அமேசான் பயன் படுத்தி அமெரிக்க கம்பெனி ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்தேன். இதை செய்யும் போது எனது பில்லிங் முகவரியில் சிறு மாற்றம் செய்தேன்.pin code
தவறாக வந்ததால் இந்த திருத்தம் செய்தேன். ஆனால் அதற்கு எனது கணக்கே நிறுத்தப் பட்டுள்ளது. அவர்களுக்கு எனது புதிய முகவரியை நான் மேலும் பல விவரங்களுடன் நிரூபிக்க வேண்டுமாம். இது மட்டும் இல்லாமல் நான் fax மட்டுமே அனுப்ப வேண்டுமாம். இந்த அட்டையே ஒரு debit card . இதில் பணமும் எடுத்து இருக்கிறார்கள். நான் இருப்பதோ ஆங்கிலம் தெரியாத ஐரோப்பிய நாட்டில். (இங்கு தான் எனது வங்கி கணக்கு உள்ளது). இதனை நான் எப்படி சரி செய்வது எனத் தெரியவில்லை.
எனவே நண்பர்களுக்கு எனது ஆலோசனை. சின்ன சின்ன தவறுகள் பில்லிங் முகவரியில் இருந்தாலும் திருத்த முனையாதீர்கள். வேண்டுமானால் இதனை அவர்களுக்கு ஈமெயில் அனுப்பி தெரியப் படுத்துங்கள்;
அவர்களே அதனை மாற்றும்போது நமக்கு இந்த தொல்லை எதுவும் இருக்காது.
இபோது எனது பணம் எப்படி திரும்ப வரும் என்று தெரியவில்லை.

Thursday, September 10, 2009
உணவை வீணாக்காதீர்கள்!
guardian newspaper
Eliminating the millions of tonnes of food thrown away annually in the US and UK could lift more than a billion people out of hunger worldwide, experts claim.
பணக்கார நாடுகள் உணவை வீணாக்காமல் இருந்தாலே ஒரு பில்லியன் பசித்த ஏழைகளுக்கு
உணவு வழங்கிடலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதை தவிர்க்க அவர்கள் வழங்கிய யோசனைகள்
1. தயவு செய்து தேவைக்கு மேல் (இலவசமாக கொடுத்தாலும்) உணவை வாங்கி எறியாதீர்கள்.
2. கடையில் offer தராங்கனு தேவை இல்லாத உணவு வாங்கி fridge ல அடுக்காதிங்க
3. மிச்சம் வராமல் சமைக்க பழகுங்க
4. காய் ,பழங்களை தேவைக்கு மேல் வாங்கி வீணாக்க வேண்டாம். அவற்றை நல்ல வகையில் பாதுகாத்து வையுங்கள்
5. அதிகமா காய் மிச்சமானா சூப் செஞ்சு சாப்பிடுங்க.
6. நம்ம தாய்மார்களை தயவு செய்து அதிகமா சமைச்சு தின்னே ஆவம்னு தின்னு குண்டாக வேண்டாம் ஆனால் அந்த உணவை தூக்கி போடாம நாளைக்கு பயன்படுத்த சொல்றாங்க.
என்ன சரியா?
நம்மாலே அடுத்தவனுக்கு மனசார கொடுக்க முடியலைனாலும் காசு இருக்குன்னு வாங்கி வீணாக்க வேண்டாம்.

உளுத்தங்கஞ்சி
இது ஒரு மீள் பதிவு!
இன்று நாள் முழுதும் உளுந்து கஞ்சி செய்முறை தேடினேன் . கிடைக்கவில்லை.
எனவே எனக்கு தெரிந்தது இங்கே!
உளுந்து (வெள்ளை) நூறு கிராம்
வெல்லம்/சர்க்கரை ஐநூறு கிராம்
ஏலம் சிறிது
சுக்கு அல்லது இஞ்சி சிறிது
நன்றாக ஆறு மணி நேரத்துக்கு மேல் ஊறவைத்த உளுந்தை மையாக அரைக்க.
எனக்கு அவ்வளவு நல்ல அரைக்கத் தெரியலனு சொன்னா நான் என்ன செய்வன்?
பாத்திரத்தில் நீர் கொதிக்கும்போது அரைத்த உளுந்தை கலந்து அடி பிடிக்காமல்
கிண்டிக் கொண்டே இருக்க.
தேவையான சுவைக்கு ஏற்ப சர்க்கரை கலந்து நன்றாக மணம் வரும் வரை அடுப்பில் மித வெப்பத்தில் காய்ச்சவும்.
ஏலம் சுக்கு நன்றாக தூளாக்கி காய்ந்த கஞ்சியில் போட்டு இறக்கவும்.
சுவை மிக்க நலம் கொண்ட கஞ்சி ரெடி.
இதைத் தேங்காய்ப் பால் என்று எங்கள் ஊரில் விற்பார்கள்.
வேறு முறை இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.

பால் சைவமா? அசைவமா?
சமீபத்தில் கலைஞர் அவர்கள் தான் சிறுவனாக இருந்தபோது
திரு கிருபானந்த வாரியாரை அசைவம் ஏன் சாப்பிடக்கூடாது
என்று கேட்டதாகவும் அதற்கு வாரியார் அவர்கள் "உயிர்களை கொல்லக்கூடாது" என்றாராம்.
கலைஞர் மீண்டும் "கீரை தானியங்கள் இவைகளுக்கும் உயிர் உண்டல்லவா?"
என்று கேட்டார். வாரியார் பதில் சொல்ல வில்லை.
அசைவம் என்று நாம் சொல்லும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் 'வலியை' உணரக் கூடிய உயிர்களில் இருந்து பெறப் படுகின்றன. உயிர்களை துன்புறுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் இவற்றைப் பயன் படுத்த மாட்டார்.
பால் பெறுவது அந்த உயிருக்கு வலியைத் தருவதில்லை. மேலும் கன்றுகளை பசியால் வாட விட எந்த மனிதனும் விரும்ப மாட்டான்.
இதைப் போல் முட்டைகளையும் சைவத்தில் சேர்க்கலாம்.
தோல் பொருட்களை மனித சமூகத்தில் எல்லோரும் பயன் படுத்துகிறோம். (இங்கு சைவம், அசைவம் நாம் பார்ப்பதில்லை. )
வெளி நாடுகளில் இறைச்சியை மிக சிறப்பாக பதப் படுத்துகின்றனர். இதற்கு மிக அதிக அளவில் நாம் ஆற்றலை வீண் செய்ய வேண்டி உள்ளது.
மேலும் இறைச்சிக்காக வளர்க்கப் படும் விலங்குகளை நாம் அவற்றின் இயல்போடு வாழ விடுவதில்லை. அவற்றின் உணவுக்காக நாம் மிக அதிகமான தாவர
உணவுப் பொருட்களை நாம் பயன் படுத்துகிறோம்.
இறைச்சி உருவாக்க நாம் செய்யும் செலவினை(ஆற்றல், மனித வளம், தீவனம்,...) நாம் சரியாக பயன் படுத்தினால் உலகில் பட்டினி இல்லாத சமூகத்தை நாம் உருவாக்கி விடலாம்.
விலங்குகளில் இருந்து எந்த வகையிலும் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளாத மக்களும் உள்ளனர்.
தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று சொன்னாலும் நாம் விலங்குகளுக்காக மேலும் அவற்றை அழிப்பதை நோக்கும்போது தாவர உணவுகள் மட்டும் உண்பது சற்றுப் பரவா இல்லை.
மீன்களுக்கு நாம் எந்த உணவும் இடுவதில்லை. அவை கடலில் இருந்து கிடைக்கும் சைவ உணவு என்று சொல்பவரும் உள்ளனர்.
சைவம், அசைவம் அவர் அவர் பார்வைக்கு உட்பட்டது.
என்னைக் கேட்டால் இறைச்சி உண்பது ஆடம்பரம், (five star hotal சாப்பாடு போல)

Tuesday, September 8, 2009
பச்சைப் பயறு உருளைக் கிழங்கு கறி
இந்த கறி நல்ல சுவையுடன் இருந்தது. அதனால் நானே இதன் செய்முறை மறக்காமல் இருக்க இங்கு பதிவிடுகிறேன்.
தேவை!
பச்சைப் பயறு 250 gram.(ஊற வைக்கும் முன்)
ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
உருளைக் கிழங்கு 250 gram
தக்காளி 200 gram
வெங்காயம் 100 கிராம்
தேங்காய் ஒரு மூடி
மற்றும் கரம் மசாலா, மிளகைத் தூள், கொத்தமல்லி தூள், (குழம்பு செய்ய தேவையானவை)
பச்சைப் பயறு வேக வைத்து எடுத்து கொள்ளவும். உருளை கிழங்கு தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு போட்டு வணக்கி விட்டு, அறிந்த வெங்காயம் சேர்த்து நன்றாக வணக்கவும். பின் தக்காளி சேர்த்து மேலும் வணங்கியவுடன் உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து அதன் பின் குழம்புக்கு அரைத்த பொருட்களை சேர்த்து தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு காய்ந்தவுடன் பச்சைப் பயறு, அரைத்த தேங்காய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையாக இருந்தால் தெரிவிக்கவும்.

மனித நேய அறக்கட்டளை!
மக்கள் எல்லோரும் நலமுடனும் மேன்மையுடனும் வாழ அரசு பல நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கும், சட்டங்களை காப்பதிலும் , நாட்டின் இறையாண்மையை பேணுவதிலும், மக்களின் அன்றாட வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இருந்து மக்கள் பணி செய்யும் IAS, IPS மற்றும் வேறு பல குடிமைப் பணிகளுக்கான UPSC தேர்வுகள் ஆண்டு தோறும் நடக்கின்றன.
மக்கள் நலனில் அக்கறையுள்ள மாணவர்கள் இத்தேர்வினை எழுதி வெற்றி பெற்று சென்றால் அரசின் வழி நாட்டு மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் நம் நாட்டை இன்னும் மேன்மைப் பாதைக்கு எடுத்து செல்வர்.
பண்புள்ள நல்ல மாணவர்கள் இந்த தேர்வு எழுதுவதற்கு பல்வேறு பயிசிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக அவர்கள் தங்கள் காலத்தை செலவிடுவது மட்டும் அல்லாது பெரும் பொருட்செலவு செயாவேண்டும்(பல புத்தகங்கள் வாங்கவும், வேறு பல செலவுகளும்).
எனவே ஏழை மாணவர்களும் இந்த தேர்வினை எழுதுவதற்கு வழி செய்யும் வண்ணம் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன.
இவற்றுள் குறிப்பாக கீழ்க்கண்ட இரு நிறுவனங்கள் சிறப்பாக இந்த பணி செய்கின்றன.
பதிவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் மற்றும் தேவையானவர்களுக்கும் இந்த செய்தியை அடைய செய்ய வேண்டும்.
http://www.annainstitute.org/ (அரசு நடத்தும் )
http://www.saidaiduraisamysmanidhaneyam.com/ (மனித நேய அறக்கட்டளை)

Subscribe to:
Posts (Atom)