Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன் -- பார்க்க நல்ல படம்

உன்னைப் போல் ஒருவன் -- பார்க்க நல்ல படம்

நம்மில் ஒருவர் திடீரென சமூகத்தின் மீது அக்கறை கொண்டு "நீதிபதிகளால் குற்றம் இழைத்தவர்கள் என்று நிரூபணம் செய்யப்பட்டவர்களை " தண்டனை அளிக்க முயலும் கதை.

கொடும் குற்றம் செய்யும் ( தீவிரவாதிகள்) எந்த காலத்திலும் தாங்கள் செய்த குற்றத்திற்கு வருந்த போவதில்லை. மீண்டும் அத்தகைய குற்றம் இளைக்கவே செய்வர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த படம் வெளியிடப் படுகிறது.

இந்த கருத்துக்கு மாறுபட்டவர் நிச்சயம் இந்த படம் பற்றி ஒரு நல்ல விமர்சனம் செய்ய இயலாது.

"மாற்றம் என்பது மட்டுமே மாறாதது"

இந்த கருத்தை இந்த மனிதர்களுக்கும் நாம் பொருத்தி பார்த்தால் ஏன் இவர்களை நம் சமூகம் வாழ அனுமதிக்க கூடாது என்ற கேள்வி எழாமல் இல்லை.

எனினும் கமல் ஹாசன் மற்றும் மோகன் லால் இருவரின் நடிப்புக்கு ஒரு சான்றாக மேலும் ஒரு படம் என்ற வகையில் இந்த படம் ஒரு சமூக படம்.

சுருதி ஹாசன் நன்றாக இசை அமைக்க வில்லை என்று குற்றசாட்டு வைக்கப் படுகிறது.

1 comment:

ஊடகன் said...

அருமையான விமர்சனம்.....