Wednesday, September 16, 2009

சமைக்க கற்றுக் கொள்ளுங்கள்

நாம் சமைப்பதால் கிடைக்கும் சில நன்மைகள்:

சகிப்பு தன்மை விரைவில் வந்து விடும்(நம் உணவை நாமே உண்பதே விட சகிப்பு தன்மை வேறு எங்கு தேவைப் படும்?)

தியானம் செய்வதில் ஏற்படும் மன ஒருமையை விட ஒரு நல்ல விருந்து சமைக்கும் போது நமக்கு மன ஒருமை கிடைக்கும்.

என்ன காய்கறி நமக்கு பிடிக்குமோ அதை மட்டும் கொண்டு சமைக்கலாம்

சில பேருக்கு உப்புமா கூட செய்ய தெரியாது. ஆனால் அடுத்தவர் சமைத்ததில் உப்பில்லை என்று சுலபமாக சொல்லி விடுவார். இவர் சமைக்க ஆரம்பித்தால் குறை கூற மாட்டார்

கொழுக்கட்டை சமைப்பதற்கு ஒன்றும் நிறைய தெரிய தேவை இல்லை. ஆனால் நல்ல சாம்பார் வைப்பது மிக கடினம்.

புளி சோறு, எலுமிச்சை சோறு முதலிய விதம், விதமான உணவு சமைக்க (சாப்பிட) அடிப்படையில் நன்றாக இந்த சாறுகளை காய வைக்க தெரிந்தால் போதும்.

காபி வைப்பதெல்லாம் இந்த காலத்தில் கடினம் இல்லை.

ஊர் பேர் தெரியாத நாட்டில் நாம் விரும்பும் வகை உணவு வேண்டுமானால் சமைக்க தெரிந்தால் போதும்

இட்லி செய்வதை விட தோசை சுவையாகவும் சிறப்பாகவும் எளிதில் செய்யலாம்

திடீர் என்று ஊரில் கடை அடைப்பு என்றால் நமக்கு வேண்டிய உணவு சுலபத்தில் நம்மால் சமைக்க முடியும்

வேறு எதில் படைப்புத்தன்மை வருகிறதோ இல்லையோ சமைக்க தெரிந்தவர் விரைவில் புது வகை சமைக்க செய்வார்.

ஆகவே எல்லோரும் அடுப்பங்கரை சென்று கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

No comments: