Sunday, August 30, 2009

மானம் என்பது என்ன?

தற்கொலை நம் சமூகத்தில் அதிகமாக காணப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்த மானம்.

நாம் வாழும் இந்த அறிவியல் யுகத்தில் மானம் என்ற இந்த பதம் எந்த அளவில் நமக்கு தேவை?

பரீட்சையில் தோல்வி!
கற்பழிப்பு!
கடன் தொல்லை!

இன்னும் நிறைய.

ஆனால் இந்த காரணங்கள் எல்லாமே காலத்தால் எளிதில் மருந்து போடக் கூடிய நிலை தான்!

ஒருவன் தன்னை உடல் ஆக்கிரமிப்பு செய்து விட்டான், அதனால் தான் வாழத் தகுதி அற்றுவிட்டோம் என்று ஒரு பெண் நினைப்பதை சமூகம் அங்கிகரிக்கலாமா?

இந்த உடலை தான் நீ அடைய முடியும். என் மனத்தை அல்ல என்று பெண் வீறு கொண்டு எழ வேண்டாமா? அவனை சட்டம் முன் நிறுத்த வேண்டாமா?




மானம் பற்றி பாடிய அவ்வை, வள்ளுவன், இன்னும் வாழ்ந்து காட்டிய மக்கள் பற்றி நாமும் அறிவோம். மானம் காக்க என் முன்னோர் போராடியவர் தான்.
ஒரு முறை போரில் தோற்று மீண்டும் படை அமைத்து போராடி தம் வீரம் நிலை நாட்டிய பரம்பரை தான் எமதும்.

வாழ்வு ஒரு முறைதான். தத்தம் புரிதலில் ஏற்படும் தவறுகளுக்காக தம்மை அழித்து கொண்ட (தற்கொலை செய்து கொண்ட) மக்கள் மீது எந்த காரணம் பற்றியும் பரிவு கூடாது.

நம் சிந்தனை புதிதாக இருக்கட்டும்.

நம்மை யாரும் எப்போதும் இழிவு செய்ய முடியாது, நம்மைத் தவிர.


மானம் எம்மை நேர் செய்ய கருவி. எம்மை அழிக்கும் கோடரி அல்ல.

பிச்சை புகினும் கற்கை நன்றே?
தவறா?
எந்த நிலையில் இருந்தும் மேல் நோக்கிய பார்வையே நமக்கு வேண்டும். நாம் எப்போதும் வீழ்த்தப் பட முடியாதவர்கள்.

உயிர் விட்டு தான் மானம்கிற ஒன்னு வேணும்னா அந்த மானம் எனக்கு வேணாம்.

உயிரோடிருந்தால் என்றேனும் ஒரு நாள் யாருக்கேனும் உபயோகமாக இருப்பேன்.
என்னை வெளிக்காட்டும் வாய்ப்பு எனக்கு உண்டு.
மானம் அழிந்து விட்டது என்று என் வாழ்வை அழித்து கொள்வதால் யாருக்கு பயன்?

இறுதி வரைப் போராடுவோம். எம் மனத்தில் நாம் அழுக்கற்றவன். என்னை யாரோ எதுவோ சொல்வரென்று நான் ஏன் என்னை அழிக்க வேண்டும்?
இறந்துவிட்டால்?



கற்பழிக்கப்பட்ட பெண் என்று நீங்கள் கூறும் அந்த பெண் எந்த காரணம் பற்றி தன்னை மாய்த்து கொள்ள வேண்டும்? இந்த மானம் என்ற கூற்றை தவிர?
உடலை விட்டு வெளி வாருங்கள்.


இன்று இத்தனை ஈழ மக்கள் வாழ்வுரிமை இழந்து விதியற்று வீழ்ந்து கிடக்கின்றரே, இவர்கள் மானம் அற்றோரா?

காலம் மாறும் காத்திருப்போம். நாமும் விதியை ஒருநாள் வெல்வோம்.

அதுவரை எம் உயிரை கையில் பிடித்து காத்திருப்போம். எம் உடலுக்கு தான் அழிவு. எம் உறுதிக்கு அல்ல! மீண்டும் நாங்கள் மாண்போடு வாழும் காலம் வரும். அதுவரை உயிர்த்திருப்போம் மானம் காக்க!


மனித நேயம் வளர்ப்போம். மனிதரை இழிவு செய்யும் மடமை நீங்கி வாழ்வோம். தவறு செய்தவனையும் அன்போடு நேசிக்கும் அன்பு நிலை அடைவோம். அப்போது மானம் என்ற பதம் பயனற்று வீழும்!.
!


!
!
!

No comments: