Monday, December 8, 2008

சாதிகள் வாழ்க!

நம் மக்கள் எப்போதும் தங்கள் குறைகளை மறைத்து மாற்றார் குறைகளை பெரிதாக எண்ணி குமைவதில் வல்லோர்!

பெரியார் தொடங்கிய சுய மரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்று சொன்னதன் முக்கிய காரணம்!

மக்கள் ஒருவரை ஒருவர் இழிவு செய்து தாழ்த்தி வாழ்தலுக்கு முக்கிய காரணமாக கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வதே!

பெரியாரின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்பதாக கூறிகொண்டாலும் நம்முள் இன்னும் சாதிப் பித்து நீங்க வில்லை.

தன்னை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டவும் தன்னை மேலானவன் என்று சொல்லிக் கொள்ளவும் சாதி என்ற சங்கிலியில் தன்னை பூட்டிக் கொள்கின்றான்!

சமூகத்தில் தீண்டாமை என்னும் தீ தன்னை சுடும்போது எதிர்த்து குரல் கொடுக்கும் அதே வேளையில் தன்னால் மற்றவனுக்கு பாதிப்பு ஏற்படும்போது
எந்த மாற்றமும் கொள்வதில்லை!

கடவுளை ஏற்றுக் கொண்டு உலக நாடுகளில் மக்கள் ஒருமையோடு வாழும் வேளையில் இங்கு சாதி, சடங்கு, சாதகம், கர்மம் என்று பல்வேறு பட்ட குழப்பங்களில் சீரழிந்து வருகிறோம்!

யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்று வாழ்ந்த மக்கள் இன்று தங்களுக்குள் பல்வேறு பிரிவினைகளில் சிக்கி தவிக்கிறோம்!

கடவுளை ஏற்றுக் கொள்வது கொள்ளாதது அவரவர் விருப்பம்!
ஆனால் கடவுள் பெயரை சொல்லி நம்மில் பிரிவுகளை ஏற்படுத்தி வாழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பிறந்த நேரம் மட்டுமே ஒருவன் வாழ்வை நிர்ணயிக்கும் என்ற நம்பிக்கையில் நாம் செய்யும் தவறுகளை எப்படிக் களைவது?

நம் சமய முன்னோர்கள் இந்த கோள்களை விட கடவுளை நம்பியவர்கள்!
ஆனால் நாம் கடவுளை விட்டுவிட்டு ஆசாமி சொல்லும் சோதிடத்தில் நம்மை
மூழ்கடித்து உள்ளோம்!

சாதிகள் இல்லையடி பாப்பா! என்ற பாரதியின் வார்த்தைக்கிணங்க
நம்மில் நம்மை நேசிக்கும் மனதை பெறுவோம்!

No comments: