Sunday, November 16, 2008

இட ஒதுக்கீடு வேண்டாம்!

இட ஒதுக்கீடு காரணமாகவே முன்னேறிய சமூகத்தினர் தங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி கவிதையை பள்ளிகளில் சொல்லிக் கொடுத்துக் கொண்டு சாதியை இட ஒதுக்கீடு என்ற பெயரில் வளர்ப்பதாக எல்லா மேந்தட்டு மக்களும் கூப்பாடு போடுகின்றனர்.


சமீப காலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரி, பணியிடங்களில் பொது இடங்களான முப்பது சதவீத இடங்களில் எல்லா சமூகத்தினரும் இடம் பெற்ற காரணம் என்ன?

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்!
நீங்களும் நாங்களும் வாழும் இந்த சமூகத்தில்

ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு சாதிக்கு என்று ஒதுக்கி வையுங்கள்!
பிறப்பு முதல் இறப்பு வரை சமூகத்தின் எல்லா நிலைகளிலும் சாதி மட்டுமே முக்கிய பிரிவாக இருக்கின்றது!

இங்கு உள்ள எல்லா மக்களும் நாங்கள் சாதி பார்க்காமல் சாதகம் பார்க்காமல்
சடங்குகளுக்கு உட்படாமல் திருமணம் செய்து கொள்ளுவோம்.
எங்கள் பிள்ளைக்கு எந்த சாதியின் அடையாளத்தையும் புகுத்த மாடோம் என்று உங்களால் உறுதி கொடுக்க முடிந்தால் எண்ணி பத்தே ஆண்டுகளில்

இட ஒதுக்கீடு என்பது இல்லாததாகி விடும்.


பேருந்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
பணியிலும், பர்லிமேன்டிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சம்மதம்!
ஏனென்றால் எங்கள் வீட்டு பெண்களும் வாய்ப்பு பெறுகின்றனர்!

ஆனால் தலித்துக்கு இட ஒதுக்கீடு என்றால் தரம் தாழ்ந்து விடும்?
என்ன ஒரு சுயநலம் எங்களுக்கு?

No comments: