மீண்டும் நீயா நானா!
சுதந்திர நாள் சிறப்பு!
பணம் படைத்தவர் & பஞ்சைகள்
நாங்கள் மேம்பட்ட பணி செய்து பணம் சேர்த்தோம். நாங்கள் உழைப்பாளிகள். நீங்கள் எங்களைக்கண்டு பொறாமைப் படுகிறீர்கள். நீங்கள் சோம்பேறிகள், குடிகாரரகள், அரசு கொடுத்த்தைக்கொண்டு வாழத்தெரியாமல்... எங்களுக்கு வேண்டியதை நாங்களே உருவாக்கிக்கொள்வோம்.
இது எல்லாம் சரி. என் அப்பன் பஞ்சை. எனக்கு ஏன் தரமான கல்வி தரக்கூடாது? நான் இந்த நாட்டின் குடிமகன் தானே? உனக்கு(பணம் படைத்தவர்) பிறந்த குழந்தை பெறும் அதே கல்விக்கு எனக்கு ஏன் உரிமை இல்லை? நாம் எல்லோரும் நலமாக வாழ்வதில் என்ன இழப்பு உங்களுக்கு?
உங்கள் தொழிலகத்தில் தானே பணி செய்கிறோம். உங்கள் மூலதனம் பணம் எனில் எமது மூலதனம் எங்கள் உடல் உழைப்பு இல்லையா? எங்கள் உழைப்பு இல்லாமல் நீங்கள் இந்த வளர்ச்சி பெற்று விட்டீரா? நீங்கள் பெற்ற பயனை நாங்கள் அடைவது எப்போது?
கூட்டுறவே நம்மை மேம்படுத்தும் என்பதை எப்போது நீங்கள் அறிவீர்?
Thursday, August 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment