பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
கடவுள் நான் அறிந்த மொழியை அறிந்தவராக இல்லாவிட்டால்?
அவர் கடவுளா?
அவருக்கு வேண்டிய மொழி தான் அழகென்றால் அவர் என்ன மொழிக்கு கட்டுபட்டவரா?
அவர் என்ன அரசரா?
அவருக்குப் பிடித்த மொழி பேசி அவரைக் காக்காப் பிடிக்க?
அவரை இசை பாடி மகிழ்விக்க வேண்டுமா?
அல்லது எனக்குத் தெரிந்ததை அவருக்கு காட்டி மகிழ்வா?
அவர் இருக்கிறாரா? ஆணா ? பெண்ணா?
எதுவும் எனக்குத் தெரியாது?
என் மனக்கண்ணில் என் அனுபவத்தில் எனது விருப்பம் போல் நான்
என்னை விட மற்றோரை மகிழ்விக்க வேண்டி
மற்றோரின் விருப்பம் போல் அமைத்துக் கொண்ட ஒரு பிம்பம்
உண்மையாக இருக்க என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பாமல்
என் மன அமைதிக்கு(சமூக நிலைக்கும்) உண்டான ஒன்றை வைத்து
என் கண் முன் வாழும் மனிதனை வெறுக்கும் நிலைக்கு ஆளாக்க நான்
எப்படித் துணிந்தேன்?
தன்னை அறிவது என்றால் என்ன?
என்னுள் இருக்கும் 'தன்' என்ற இருப்பு மற்ற உயிரிலும் இருக்கும் என்பது தானா?
என்னை மற்றவர் கொச்சை படுத்த நினைத்தால் நான் பெரும் அவலம் மற்றவருக்கும்
என்னால் ஏற்படாமல் காத்துக் கொள்தலா?
இறைவா! நீ யாரோ! எந்த மதமோ! நான் அறியேன்!
என் மனத்தில் என்றும் எல்லோரையும் அன்பு கொண்டு
நோக்கும் கருணை மட்டும் கொடு.
வேறு ஒன்றும் வேண்டாம் பராபரமே!
உன் நிழலடி கூட எனாக்கு வேண்டாம்!
என் மனத்தில் 'தன்' என்ற சிந்தனை இருக்கும் வரை
அமைதி கொண்டு வாழும் அரிய வரம் வேண்டும்!
வாழ்க நீ!
Saturday, July 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment