இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் திரு சமுத்திரகனி நட்பு பற்றி தன் கருத்தை
மிகத்தெளிவாக எடுத்து சொன்னார்!
நட்பு என்பது எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல!
அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுலக நண்பர் ஒருவர் தன் கருத்தைக்
கூறுவதாக நினைத்துக்கொண்டு திரு சமுத்திரகனி சொன்ன எதுவும் ஏற்று கொள்வது மனித வாழ்வின் மாபெரும் தவறு என்று சொல்கிறார்!
நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்தலே இயல்பாக இருக்க முடியும்.
இந்த உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்க முடியாது!
என் அனுபவம் என்னை சிந்திக்க செய்கிறது!
மேலும் நான் பார்த்து அறிவதில் எது எனக்கு தேவையோ அதுவே நான் எடுத்துக் கொள்வேன்!
ஊரில் யாரோ ஒருத்தன் பொண்டாட்டி தப்பு செஞ்சா என் பொண்டாட்டி கூட நான் ஒரு எல்லயோட தான் பழகுவன்னு சொல்ல முடியுமா?
நண்பர்கள் யாரா வேணாம் இருக்கலாம்.
என் நண்பர்கள் என்னைத் தீர்மாணிக்கிறார்கள்!
அதே சமயம் என் நண்பர்களை நான் தீர்மாணிக்கிறேன்!
சமுத்திரக்கனி சொன்னா உங்களுக்கு கோவம் வரும்.
என்னோட இயல்பா நான் மத்தவங்களப் பார்த்து ஏன் மாத்திக்கணும்?
ராமகிருஷ்ண மஹரிஸி ஒரு தேள் கதை தெரியுமா?
படித்து பாருங்கள்.
ஒரு தேள் தண்ணி பாத்திரத்தில் விழுந்துடுச்சி
அதை பார்த்த சாது அதை எடுத்து வெளில விட்டார்
ஆனா தேள் தன்னை பாதுக்காத்துக்க அவரைக் கொட்டிடுச்சி.
மறுபடியும் அது தண்ணில விழுந்துடிச்சி
இவரும் விடாம அதை எடுத்து வெளில விட்டார்
பக்கத்துல இருந்தவங்க இவர் கிட்ட கேட்டாங்க ஏன் இப்படி செய்றிங்க?
இவர் சொன்னார் கொட்டுவது தேள் இயல்பு!
காப்பாற்றுவது என் இயல்பு !
நாம் எல்லாம் மனிதர்கள்!
துரோகம் செய்வான்னு நினச்சே வாழ்கையே என் தொலைக்கணும்?
தலைப்பு நண்பர்கிரதுனால் சமுத்திரகனி அதில் மட்டுமே பேசினார்!
ஒரு வேளை நம்மை சுற்றி இருப்போரிடம் எப்படி பழக வேண்டும் என்று தலைப்பு இருந்திருந்தா நான் நினைக்கிறேன் அதற்கும் இதுதான் பதிலா சொல்லி இருப்பார்
நண்பன் மட்டுமா துரோகம் செய்வான்?
நம்மை சுற்றி இருக்குற எல்லாரும் தான்!
அதுக்காக?
நம்மை சுற்றி இருப்போரை அன்புடன் நேசிப்போம்
Wednesday, July 15, 2009
Saturday, July 11, 2009
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
கடவுள் நான் அறிந்த மொழியை அறிந்தவராக இல்லாவிட்டால்?
அவர் கடவுளா?
அவருக்கு வேண்டிய மொழி தான் அழகென்றால் அவர் என்ன மொழிக்கு கட்டுபட்டவரா?
அவர் என்ன அரசரா?
அவருக்குப் பிடித்த மொழி பேசி அவரைக் காக்காப் பிடிக்க?
அவரை இசை பாடி மகிழ்விக்க வேண்டுமா?
அல்லது எனக்குத் தெரிந்ததை அவருக்கு காட்டி மகிழ்வா?
அவர் இருக்கிறாரா? ஆணா ? பெண்ணா?
எதுவும் எனக்குத் தெரியாது?
என் மனக்கண்ணில் என் அனுபவத்தில் எனது விருப்பம் போல் நான்
என்னை விட மற்றோரை மகிழ்விக்க வேண்டி
மற்றோரின் விருப்பம் போல் அமைத்துக் கொண்ட ஒரு பிம்பம்
உண்மையாக இருக்க என்ன ஆதாரம் என்று கேள்வி எழுப்பாமல்
என் மன அமைதிக்கு(சமூக நிலைக்கும்) உண்டான ஒன்றை வைத்து
என் கண் முன் வாழும் மனிதனை வெறுக்கும் நிலைக்கு ஆளாக்க நான்
எப்படித் துணிந்தேன்?
தன்னை அறிவது என்றால் என்ன?
என்னுள் இருக்கும் 'தன்' என்ற இருப்பு மற்ற உயிரிலும் இருக்கும் என்பது தானா?
என்னை மற்றவர் கொச்சை படுத்த நினைத்தால் நான் பெரும் அவலம் மற்றவருக்கும்
என்னால் ஏற்படாமல் காத்துக் கொள்தலா?
இறைவா! நீ யாரோ! எந்த மதமோ! நான் அறியேன்!
என் மனத்தில் என்றும் எல்லோரையும் அன்பு கொண்டு
நோக்கும் கருணை மட்டும் கொடு.
வேறு ஒன்றும் வேண்டாம் பராபரமே!
உன் நிழலடி கூட எனாக்கு வேண்டாம்!
என் மனத்தில் 'தன்' என்ற சிந்தனை இருக்கும் வரை
அமைதி கொண்டு வாழும் அரிய வரம் வேண்டும்!
வாழ்க நீ!

Subscribe to:
Posts (Atom)