Sunday, October 26, 2008

சந்திரயான்

காலைக் கதிரவன் எழுப்பிய வேளையில்
புலப் பட்டது நான் இருப்பது நடைபாதையில்!

பன்றிகளின் உறுமல் உணர்த்தியது
திறந்தவெளிக் கழிப்பறையை!

பையில் இல்லாத சில்லறை அறிவித்தது
எனக்கு வேலை இல்லை என்று!

கையில் கொண்ட சான்றிதழ் சொன்னது
நான் பட்டதாரி என்று!

வயிற்றின் குமுறலில் என்னை உணர்ந்தேன்!
சென்றேன் பொதி சுமக்க!

இந்தியா விண்ணுக்கு அனுப்பியது ஆளில்லா கலத்தை!
மார் தட்டிக் கொள்ள நாங்கள் வல்லரசு என்று!

No comments: