Tuesday, September 8, 2009

பச்சைப் பயறு உருளைக் கிழங்கு கறி

இந்த கறி நல்ல சுவையுடன் இருந்தது. அதனால் நானே இதன் செய்முறை மறக்காமல் இருக்க இங்கு பதிவிடுகிறேன்.

தேவை!

பச்சைப் பயறு 250 gram.(ஊற வைக்கும் முன்)
ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்

உருளைக் கிழங்கு 250 gram
தக்காளி 200 gram
வெங்காயம் 100 கிராம்
தேங்காய் ஒரு மூடி
மற்றும் கரம் மசாலா, மிளகைத் தூள், கொத்தமல்லி தூள், (குழம்பு செய்ய தேவையானவை)

பச்சைப் பயறு வேக வைத்து எடுத்து கொள்ளவும். உருளை கிழங்கு தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், இஞ்சி, பூண்டு போட்டு வணக்கி விட்டு, அறிந்த வெங்காயம் சேர்த்து நன்றாக வணக்கவும். பின் தக்காளி சேர்த்து மேலும் வணங்கியவுடன் உருளைக் கிழங்கு துண்டுகள் சேர்த்து அதன் பின் குழம்புக்கு அரைத்த பொருட்களை சேர்த்து தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க விடவும். குழம்பு காய்ந்தவுடன் பச்சைப் பயறு, அரைத்த தேங்காய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையாக இருந்தால் தெரிவிக்கவும்.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்